நாயகன் பிரஜன் சென்னையில் இசைக் கருவிகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் நிலையில் . அவருக்கு உதவியாக ரெடின் கிங்லி உடன் இருக்கிறார் .
எந்த நேரத்திலும் எப்பொழுதும் பள்ளிப் பருவ காதலியை நினைத்துக் கொண்டே வாழ்ந்து வரும் பிரஜன் தன்னை பிரிந்து வெளிநாடு சென்ற காதலி நிச்சயம் தனக்காக காத்திருந்து தன்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறார்
பிரஜனை மனதார காதலிக்கும் முறைப்பெண்ணான மனிஷா யாதவ் பிரஜனிடம் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார். அதற்கு பிரஜன் நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன் எனவே உன்னை திருமண செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார். இதனால் மனம் உடையும் மனிஷா தற்கொலைக்கு முயற்சிக்கிறார்..
ஒரு கட்டத்தில் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கட்டாயப்படுத்த வேறு வழி இல்லாததால் மனிஷா யாதவை பிரஜின் திருமணம் செய்துக் கொள்கிறார் . திருமணமாகியும் காதலியை மறக்க முடியாமல் அவர் நினைவாகவே பிரஜின் இருக்கிறார். இதனால் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனையால் மனிஷா யாதவ் மனதளவில் பாதிக்கப்படுகிறார்.
இந்நேரத்தில் மதுமிதாவின் தங்கை திருமணத்திற்காகவும், பிரஜனை பார்ப்பதற்காகவும் பிரஜனின் காதலி வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வருகிறார்.
இந்நிலையில் தான் நினைத்தது போல் தனக்காக பல வருடங்களாக காத்திருந்த தனது காதலி, தன்னை தேடி வந்திருப்பதை அறிந்த பிரஜன், பள்ளி பருவத்தில் பிரிந்த காதலியுடன் தான் விரும்பியபடி ஒன்று சேர்ந்தாரா? இல்லை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக்கொண்ட மனிஷா யாதவுடன் மீண்டும் இல் வாழ்க்கையில் இணைந்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் ‘நினைவெல்லாம் நீயடா’
நாயகனாக பிரஜன் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்திருக்கிறார். காதலியை மறக்க முடியாமல் நினைத்து கொண்டும் காதலியின் நினைவால் மனைவியுடன் வாழ முடியாமலும் படும் வேதனைகளை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் .
நாயகியாக நடிக்கும் சினாமிகா கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு .
பிரஜனின் மனைவியாக வரும் மனிஷா யாதவ் ,,பள்ளி பருவத்தில் நடிக்கும் ரோஹித் , யுவலக்ஷ்மி, பிரஜனின் நண்பராக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி , மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், யாசர், அபி நக்ஷத்ரா என நடித்த நடிகர்களின் பங்களிப்பு நடிப்பில் சிறப்பு .
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
பள்ளி பருவ முதல் காதல் எப்பொழுதும் வெற்றி பெற்றதில்லை ,,,, தன் காதலியை நினைத்து தன் காதல் வெற்றி பெற போராடும் ஒருவரது கதையாக படத்தை இயக்கியுள்ளார் சிலந்தி & அருவா சண்டை படங்களை இயக்கிய ஆதிராஜன்
ரேட்டிங் ; 3 / 5
Comments