top of page

’ரெபல்’ - விமர்சனம் !

mediatalks001

1980களின் காலகட்டத்தில் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளியாக இருக்கும் சுப்ரமணிய சிவாவின் மகனாகிய ஜி.வி.பிரகாஷ் குமாரும் ,, ஆதித்யா பாஸ்கரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.


எஸ்டேட்டில் பாடுபடும் பெற்றோர்கள் பிள்ளைகளின் நிலை படிப்பால் உயர்ந்தால் அவர்களின் வாழ்க்கை நிலை மாறும் ,,, இதனால் இவர்கள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என பெற்றோர்கள் அனைவரும் விரும்புகின்றனர் .

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும் ஆதித்யாபாஸ்கருக்கும் கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனையடுத்து , இருவரும் அந்த கல்லூரியில் படிக்கச் செல்கின்றனர்.

அந்த கல்லூரியில் மொழி வெறியினால் மலையாள மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அதேபோல், அங்கிருக்கும் மலையாள இரண்டு மாணவர் அமைப்புகள் தமிழ் மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். ,


தமிழக மாணவர்களை கண்டாலே விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில்ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பனான ஆதித்யாபாஸ்கர் மலையாள மாணவர்களால் அடித்துக் கொல்லப்படுகிறார். இந்நேரத்தில் ஆத்திரமடைந்த அனைத்து தமிழ் மொழி மாணவர்களும் கொலை வெறியுடன் மலையாள மாணவர்களை அடித்து பந்தாடுகின்றனர் .


இக்கட்டான இச் சுழ்நிலையில் கல்லூரியில் தேர்தல் வர இரு அணிகளுக்கு எதிராக தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்கள் சார்பாக புதியதாய் தமிழ் அமைப்பை ஏற்படுத்தி கொடி பிடித்து தேர்தல் களத்தில் இறங்குகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார்.

முடிவில் தேர்தலில் வெற்றி பெற்று மொழி வெறியிலிருந்து படிக்கும் தமிழ் மாணவர்களை ஜி.வி.பிரகாஷ்குமார் காப்பாற்றினாரா ? என்பதை சொல்லும் படம்தான் ’ரெபல்’

கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் ஜி வி பிரகாஷ்குமார் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். காதல்,ஆக்க்ஷன்,எமோஷனல்,கோபம் எனஅனுபவ நடிகராக பல பரிமாணங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கல்லூரி மாணவியாக வரும் அமைதியான அழகில் நாயகி மமிதாபைஜு ,கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, தமிழ் மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

வில்லன்களாக நடித்திருக்கும் வெங்கடேஷ், ஷலுரகீம் வில்லத்தனமான நடிப்பில் மிரட்டுகின்றனர் .

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் கதை ஓட்டத்திற்கு பக்க பலம் .

அருண்ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவில் 1980 ம் ஆண்டு திரையில் கொண்டுவர பாடுபட்டுள்ளார்

1980களில் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு

கேரளாவில் உள்ள பாலக்காட்டில் கல்லூரி ஒன்றில் படிக்கும் தமிழ் மாணவர்களை மலையாள எதிரணி கும்பல் உள்ளூர் அரசியல் பெரும் புள்ளிகளுடன் இணைந்து கொடுமைப் படுத்தும் கதையை வைத்து கேரளாவில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தலுக்கு எதிராகவும் தமிழுக்கான உரிமையை மீட்டெடுக்கும் விதமாகவும் கொண்ட திரைக்கதை அமைப்பில் புரட்சிகரமான படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ்.


ரேட்டிங் ; 3 . / 5

Comentarios


©2020 by MediaTalks. 

bottom of page