நாயகன் ஷாரிக் ஹாசனும் அவரது காதலியான நாயகி ஹரிதாவும் நண்பர்களுடன் சேர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். சென்ற இடத்தில்ஷாரிக் ஹாசனுக்கும் அவனது நண்பர்களுக்கும் பிரச்சனையாகி மோதல் ஏற்படுகிறது. அந்த மோதலுக்குப் பிறகு நாயகன் ஷாரிக் ஹாசன் காணாமல் போகிறார். அதை அறிந்த ஷாரிக் ஹாசனின் நண்பன் அரவிந்த் போலீசுக்கு தகவல் கொடுக்கிறான்.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் செல்வம் நண்பர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துகிறார் . போலீசார் விசாரணையில் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, ஒரு கட்டத்தில் ஷாரிக் ஹாசனை காணவில்லை என போலீசுக்கு தகவல் கொடுத்த அரவிந்த் திடீர் என காணாமல் போகிறார்.
முடிவில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா? ஷாரிக் ஹாசன், அரவிந்த் இருவரும் காணாமல் போனதற்கான காரணத்தை போலீஸ் கண்டுபிடித்ததா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘நேற்று இந்த நேரம்’
நாயகனாக நடித்திருக்கும் ஷாரிக் ஹாசன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா ,மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வா மற்றும் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலா இருவரும் படத்திற்கு பக்க பலமாக உள்ளனர் .
கெவினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதை ஒட்டகத்திற்கு துணை நிற்கிறது. விஷாலின் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
சுற்றுலா செல்லும் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போன கதையை வைத்து அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை மையமாக கொண்ட திரைக்கதையுடன் சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சாய் ரோஷன்.கே.ஆர்,
ரேட்டிங் ; 3 / 5
留言