யோகி பாபுவின் கிராமத்தில் உள்ள பூர்வீக அரண்மனையை பற்றி விசாரிக்க சேஷுவை சோனா ஹைடன் அழைத்து சில தகவல்களை கேட்க,,,, பிளாஸ் பேக்காக அவர் சொல்லும் விவரங்களுடன் கதை ஆரம்பிக்கிறது .யோகி பாபு வெளிநாட்டு காதல் மனைவியை விவாகரத்து கேட்டு அதற்கான முயற்சி எடுக்கும்போது
விவாகரத்து கொடுக்க வேண்டும் என்றால், யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் வாழ வேண்டும், என்று வெளி நாட்டு பெண் நிபந்தனை விதிக்கிறார். அவரது நிபந்தனைபடி, அந்த அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருக்க சம்மதிக்கும் யோகி பாபு, அரண்மனையின் மேல் பகுதிக்கு மட்டும் யாரும் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார். ஆனால், வெளி நாட்டு பெண் மட்டும் அவ்வபோது அரண்மனையின் மேல்தளத்தில் உள்ள அறை ஒன்றில் நுழைய முயற்சித்து வருகிறார்.
இதற்கிடையே, யோகி பாபுவை பழிவாங்க துடிக்கும் அவரது நண்பர்கள் சேசு, தங்கதுரை, பாலா இவர்களுடன் ரோபோ சங்கர் ஆகியோர் அந்த அரண்மனைக்குள் நுழைகிறார்கள். திடீரென நடிகையாகவே ஓவியாவும் அந்த அரண்மனைக்கு வருகிறார் . இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் காமெடி கலாட்டாகளுடன் ரசிகர்களை சிரிக்க வைக்கும் படம்தான் ‘பூமர் அங்கிள்’.
கதையின் நாயகனாக நடிக்கும் யோகி பாபு வழக்கமான காமெடியான நடிப்பில் வசனங்களை பேசி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் .
சேசு, தங்கதுரை, பாலா, ரோபோ சங்கர் சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர் . நீண்ட நாட்களுக்கு பின் நடிக்கும் ஓவியா என நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
இசையமைப்பாளர்கள் சாந்தன் - தர்ம பிரகாஷ் இசையும் பின்னணி இசையும் கதைக்கு பக்க பலம் !
காமெடி நட்சத்திர கூட்டத்துடன் கதையில் லாஜிக்கையும் பார்க்காமல் ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கலகலப்பான திரைக்கதையுடன் ரசிகர்கள் விரும்பும் காமெடி படமாக படத்தை இயக்கியுள்ளார்இயக்குநர் ஸ்வாதேஷ்.
ரேட்டிங் ; 3 / 5
Comments