top of page

’அரண்மனை 4’ - பட விமர்சனம் காமெடி கலந்த திரைக்கதையுடன் பயமுறுத்தாத பேய் படம்


கோவூர் கிராமத்தில் சுந்தர் சியின் தங்கையான தமன்னா கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் .

 கிராமத்தில் இருக்கும் பழைய அரண்மனையில் சில பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடும் சந்தோஷ் பிரதாப்

ஒரு நாள் நடைப்பயிற்சி செல்லும் போது அனுமாஷ்ய சக்தியான பேயினால் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார் .

மேலும் சந்தோஷ் பிரதாப்பின் உருவத்தில் அரண்மனைக்குள் செல்லும் தீய அனுமாஷ்ய சக்தி தமன்னாவின் குழந்தைகளை கொலை செய்ய முயற்சி செய்கிறது.

குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்யும் தமன்னாவும் அதனால் கொல்லப்படுகிறார்.

தகவலறிந்து கிராமத்துக்கு வரும் தமன்னாவின் அண்ணன் சுந்தர்.சி தனது தங்கை மற்றும் கணவர் மரணத்திற்கு பின்னணியில் மர்மங்கள் நிறைந்திருப்பதை அறிந்துக் கொள்வதோடு, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இந்நேரத்தில் அதே கிராமத்தை சேர்ந்த மேலும் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள்.

முடிவில் தமன்னா – சந்தோஷ் பிரதாப் இவர்களது மரணத்திற்கு யார் காரணம் என்பதை சுந்தர்.சி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’அரண்மனை 4’

வக்கீலாக நடித்திருக்கும் சுந்தர்.சி கதையின் நாயகனாக இயல்பான நடிப்பில் தங்கை மீது பாசம் கொண்ட அண்ணனாகவும், தங்கையின் குழந்தைகளை காப்பாற்ற போராடும் பாசமுள்ள தாய் மாமாவாகவும் ஆக்க்ஷன், செண்டிமெண்ட் , காமெடி என அனைத்திலும் சிறப்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .

சுந்தர்.சிக்கு தங்கையாக இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருக்கும் தமன்னா குழந்தைகளை காப்பாற்ற போராடும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். தாயாகவும், பேயாகவும் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார்.

கணவராக வரும் சந்தோஷ் பிரதாப் ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் கவனிக்க வைக்கிறார் .

யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் ஆகியோருடன் மறைந்த சேசுவும் காமெடியில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர் .

ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார் என நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள் நடிப்பில் கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர்

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையும் ,,,,,ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு பக்க துணை .


கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் அனைவரும் சிரித்து மகிழ வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் வடஇந்திய மக்களை பயமுறுத்தும் பாக் என்ற அனுமாஷ்ய தீய சக்தியை மையமாக வைத்து காமெடி கலந்த திரைக்கதையுடன் பயமுறுத்தாத பேய் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி


ரேட்டிங் 3. 5 / 5

bottom of page