அறந்தாங்கியில் உள்ள ஒரு கிராமத்தில் சிறு வயதில் தகப்பனை இழந்த வேல ராமமூர்த்தி தாயின் ஆதரவில் மாரி முத்து , தீபா சங்கர் உட்பட தன் குடும்ப உறவுகளை தந்தையின் அரவணைப்பை போல அனைவரின் மீது பாசமாக வாழ்ந்து வருகிறார் .
சில ஆண்டுகளுக்கு பின் அனைவருக்கும் திருமணமான நிலையில் கிராமத்தில் மழை பெய்யாததால் விவசாயம் செய்ய முடியாத கிராம மக்கள் அனைவரும் பிழைப்பு தேடி வேறு இடத்திற்கு செல்ல ,,வேல ராமமூர்த்தியும் மாரிமுத்து மற்றும் அவரது மனைவியான செந்தில் குமாரியை தன் தாயை கவனித்து க்கொள்ளும்படி குடும்பத்துடன் பிழைப்புக்காக வெளியூர் செல்கிறார் .
இந்நிலையில் ஒரு பண பிரச்சனையினால் செந்தில் குமாரிக்கும் வேல ராமமூர்த்தியின் தாயிக்கும் சண்டை ஏற்பட ஆத்திரமடையும் மாரிமுத்து தன் தாயை வீட்டை விட்டு துரத்துகிறார் .
மேலும் சொத்துக்களை பாகம் பிரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் .
குடும்ப பிரச்சனையால் வேல ராமமூர்த்தியின் தாய் மன உளைச்சலில் மரணமடைய,,, கோபத்தில் உடன் பிறந்த குடும்ப உறவுகளை ஒதுக்கி வைத்து வேல ராமமூர்த்தியும் ,, மாரிமுத்துவும் ஜென்ம பகையாளிகளாக வாழ்ந்து வருகின்றனர் .
முடிவில் அண்ணனான வேல ராமமூர்த்தியின் குடும்பமும் ,, தம்பியான மாரிமுத்துவின் குடும்பமும் ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்ததா ? என்பதை சொல்லும் படம்தான் 'வீராயி மக்கள் '
கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக குடும்ப உறவுகளாக வரும் வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் ,செந்தில் குமாரி என அனைவரும் மண் மணம் மாறாத கிராம மக்களாக நடிப்பில் வாழ்கின்றனர் .
எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தீபன் சக்கரவர்த்தி இசை கதையின் பக்க பலமாக இருக்கின்றது .
ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரித்துள்ளார்.
இன்றைய அவசர உலக வாழ்க்கையில் கூட்டுக் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை விளக்கும் தெளிவான கதையுடன் ,,,, இயல்பான எதார்த்த ஜீவனுள்ள வசனங்களுடன் கிராமத்து வாழ்வியலின் அழகுடன் பிரிந்து வாழும் குடும்ப உறவுகள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா.
ரேட்டிங் - 3.5 / 5
Comentarios