பள்ளி பருவ காலத்தில் தன் அம்மாவுக்கும் -அப்பாவுக்கும் ஏற்படும் பிரச்சனையால் நாயகன் ஏகனுக்கும், அவரது தங்கையான
சத்யாதேவிக்கும் ஆதரவளித்த பாட்டியும் இறந்துவிட யாருடைய ஆதரவில்லாமல் கைவிடப்படும் நேரத்தில் அவர்களுக்கு கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபு அடைக்கலம் கொடுக்கிறார்.
கோழிப்பண்ணையை பதிலாக கோழி இறைச்சிக் கடை வைத்திருக்கும்
யோகி பாபுவின் ஆதரவில் ஏகன் வளர்ந்து இறைச்சிக் கடையில் வேலை செய்து பணத்தை சேர்த்து வைக்கிறார்.
தங்கை சத்யா தேவியை கல்லூரியில் சேர்த்து நன்றாக படிக்க வைக்கிறார். இதனிடையே இறைச்சிக் கடை எதிரில் பானைக்கடை வைத்திருக்கும்; பிரிகிடா சாகா ஏகனை ஒரு தலையாக காதலிக்கிறார்.
இந்நிலையில் சத்யா தேவியை கல்லூரி நூலக ஆசிரியரின் மகன் லியோ சிவக்குமார் காதலிக்க தொடங்குகிறார்.
முதலில் மறுப்பு தெரிவிக்கும் சத்யா தேவி பின்னர் லியோ சிவகுமாரை காதலிக்கிறார்.
இவர்களின் காதல் ஏகனுக்கு தெரிந்து விட, தாயைப் போல் தங்கை வழி தவறி சென்று விடக்கூடாது என்று தங்கை காதலனை அடித்து உதைத்து துரத்தி விடுகிறார்.
முடிவில் தாயும் தந்தையுமாக பெற்றோர் இல்லாத குறை தெரியாமல் சத்யா தேவியை வளர்த்த நாயகன் ஏகன் இருவரது காதலை ஏற்று கொண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைத்தாரா ?
தன்னை மனதார காதலித்த பிரிகிடா சாகாவின் காதலை ஏகன் ஏற்று கொண்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம் தான் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’.
செல்லதுரை என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஏகன்,அறிமுக நடிகராக இல்லாமல் அனுபவ நடிகராக கதாபாத்திரத்தை உணர்ந்து அசல் கிராமத்து இளைஞராக பாசம், காதல், சோகம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய குணசித்திரமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்யாதேவி இயல்பான நடிப்பில் முள்ளும் மலரும் நடிகை ஷோபாவை நடிப்பில் நினைவுபடுத்துகிறார்
நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகா,குணச்சித்திர வேடத்தில் யோகி பாபு,
ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவக்குமார், நவீன், குட்டிப்புலி தினேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் ஒளிப்பதிவும் , என்.ஆர்.ரகுநந்தன் இசையும் பாராட்டும் ரகம்
அண்ணன் தங்கை பாச கதையுடன் நாயகனின் வாழ்க்கை பயணத்தை மனித உணர்வான திரைக்கதை அமைப்புடன் அனைவரும் ரசிக்கும் குடும்ப படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.
ரேட்டிங் - 3 / 5
Comments