top of page

‘ஹார்டிலே பேட்டரி’ - இணைய தொடர் விமர்சனம்

  • mediatalks001
  • 18 hours ago
  • 1 min read

ree

அறிவியல் மீது ஆர்வம் கொண்ட நாயகி பாடினி குமாருக்கு இன்றைய கால கட்டத்தில் உடலில் உள்ள நோய்களை கண்டுபிடிப்பதில் தொடங்கி, பேசுவது உண்மையா ? பொய்யா ? என்பதை கண்டுபிடிப்பது என பலவற்றுக்கு அறிவியல் கருவிகள் பயன்படும் போது, ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்க ஒரு கருவியை ஏன் உருவாக்க கூடாது ? என ஒரு கருவியை உருவாக்குகிறார். ஒருவர் மீது மற்றொருவருக்கு எவ்வளவு காதல் இருக்கிறது, என்பதை சொல்லும் அந்த கருவி வெற்றிகரமாக இயங்குகிறது.


 இந் நிலையில், நாயகி பாடினி குமாரை சந்திக்கும் நாயகன் குரு லக்‌ஷ்மன், அவரது கருவி பற்றி அறிந்து அதை கிண்டல் செய்வதோடு, அந்த கருவியால் ஒருவர் மனதில் இருக்கும் காதலை கண்டுபிடிக்க முடியாது, என்பதை நிரூபித்து காட்டுவதுடன் நாயகியை காதலிக்க வைப்பதாகவும், சவால் விடுகிறார். இந்த சவாலில் குரு லக்‌ஷ்மன் நாயகன் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் இணைய தொடர்தான் ‘ஹார்டிலே பேட்டரி’.


 நாயகனாக நடிக்கும் குரு லக்‌ஷ்மன் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்


நாயகியாக நடித்திருக்கும் பாடினி குமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகலக்‌ஷ்மி, இனியள், ஜீவா ரவி, சர்மிளா, பிரவீன் பிரின்ஸி, கலை, அஜித் பவித்ரா, சீனு என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. 


கூலி செளந்தரராஜனின் ஒளிப்பதிவும்,  மைக்கேல் ஆகாஷின் இசையும் தொடருக்கு பக்க பலம்.


வித்தியாசமான முயற்சியாக அறிவியலோடு சேர்த்து இதயத்தை தொடும். காதல் கதையை சொல்வதுடன்  தற்போதைய விஞ்ஞான காலத்தில் அறிவியல் கருவி மூலம் காதலை கண்டுபிடிக்கலாம் என்பதை அழுத்தமாக பதிவு செய்து எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சதாசிவம் செந்தில்ராஜன்,


ரேட்டிங் - 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page