உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், ஆகியோரின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமாண்டிக் மெலடி வெளியாகியுள்ளது!
'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் இருந்து வெளியான முதல் இரண்டு சிங்கிள்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இப்போது ராம் பொதினேனி மற்றும் காவ்யா தாப்பரின் ரொமாண்டிக் மெலடி, க்யா லஃப்டா இந்த காலநிலையை மேலும் இதமாக்க வெளியாகியுள்ளது.
க்யா லஃப்டா பாடலை கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்படியாக துள்ளல் இசை மற்றும் பாடகர்களுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா. கேட்கும்போதே தங்களின் உற்சாகம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தப் பாடலில் சரியாக சேர்க்கப்பட்டுள்ள ஹூக் லைன் பாடலின் உற்சாகத்தை மேலும் கூட்டுகிறது. இது க்யா லஃப்டா பாடலைக் கேட்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருப்பதை உறுதி செய்கிறது.
தனுஞ்சய் சீபனா மற்றும் சிந்துஜா சீனிவாசன் ஆகியோர் தங்கள் குரல்கள் மூலம் பாடலை மேலும் உயர்த்தியுள்ளனர். இவர்களின் குரலுக்கு ஸ்ரீ ஹர்ஷ எமானியின் பாடல் வரிகள் மெருகூட்டியுள்ளது. பாடலில் ராம் மற்றும் காவ்யா தாப்பருக்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைகிறது என்றால் மிகையில்லை.
டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்ஸ் மற்றும் புரோமோஷன்ஸ் செய்து வருகிறது.
பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.
சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
நடிகர்கள்: ராம் பொதினேனி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர், அலி, கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்நாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
உலகளாவிய வெளியீடு: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட், நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி,
தலைமை செயல் அதிகாரி: விசு ரெட்டி,
இசை: மணி ஷர்மா,
ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி,
ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா ,
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா
Comments