மன்சூர் அலிகானின் "சரக்கு" படத்தின் பாடல்கள் மற்றும் திரை முன்னோட்டம் 'விநாயகர் சதுர்த்தி' அன்று வெளியாகிறது!
மதுப்பழக்கத்தால் பல ஏழை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கு பின்னணியில் இருக்கும் உண்மையை தனது ‘சரக்கு’ திரைப்படம் மூலம் உரக்க சொல்ல வருகிறார்.
மன்சூர் அலிகானுடன் கே.பாக்யராஜ், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், வலினா, பபிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.
அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகும் "சரக்கு" படத்தின் இசை வெளியீட்டு விழா, செப்டம்பர் 19 ஆம் தேதி 'விநாயகர் சதுர்த்தி' அன்று மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது!
@GovindarajPro
Comments