top of page

பள்ளிக் குழந்தைகளைக் கவர்ந்து இழுக்கும் “ஷாட் பூட் த்ரீ”

  • mediatalks001
  • Oct 16, 2023
  • 1 min read

பள்ளிக் குழந்தைகளைக் கவர்ந்து இழுக்கும் “ஷாட் பூட் த்ரீ”


"ஷாட் பூட் த்ரீ" திரைப்படம், குழந்தைகள் மத்தியில் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, கதாப்பாத்திரங்கள், மையக் கருத்து ஆகியவை, குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளன. திரையரங்குகள் அனைத்தும், பள்ளிக் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன.


வீட்டை விட அலுவலகத்தில் அதிக நேரம் இருக்கும் பெற்றோரின் மகன் கைலாஷ். தனது தனிமையைப் போக்கிக்கொள்ள, தனக்கு ஒரு தம்பி வேண்டும் என்று பெற்றோரைக் கேட்க, கைலாஷின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இதனால் கைலாஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து மேக்ஸ் என்ற செல்லப் பிராணியை வளர்க்கிறான். தன் தம்பி போன்று கைலாஷ் வளர்க்கும் மேக்ஸ், ஒரு நாள் தொலைந்துவிடுகிறது. தனது செல்லப் பிராணியைத் தேடும் நான்கு சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் பாடம் தான் இந்த “ஷாட் பூட் த்ரீ.”


திரைப்படத்தின் வெற்றிக்குப் பள்ளிகள், முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன. பள்ளி நிர்வாகத்தினர், “ஷாட் பூட் த்ரீ”யை ஒரு படமாக இல்லாமல், பாடமாகப் பார்க்கிறார்கள். தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல அனுபவம் தரக்கூடிய, சமூகச் சிந்தனை ஊட்டக்கூடிய வாய்ப்பாகப் பார்க்கிறார்கள்.


அக்டோபர் 6 அன்று வெளியான "ஷாட் பூட் த்ரீ", குடும்பங்களுக்கும் இளம் பார்வையாளர்களுக்கும் மனம் வருடும் திரைப்படமாக அமைந்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்தப் படம், திரையரங்குகளில் கொண்டாடப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். ஆனந்த் ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன் ஆகியோரின் கூட்டு முயற்சியில் மனத்தை ஈர்க்கும் திரைக்கதையாக மலர்ந்துள்ளது. சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு ஆகியோருடன் சிவாங்கி, பூவையார், ப்ரணிதி, கைலாஷ் ஹீட் மற்றும் வேதாந்த் வசந்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு நொடியையும் அழகாகப் படம்பிடித்துள்ளது. வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யாவின் மனத்தை மயக்கும் இசையும், பின்னணி இசையும் காட்சிகளின் உணர்ச்சிகளுக்கு ஆழம் சேர்த்துள்ளன. பரத் விக்ரமனின் படத்தொகுப்பு, சீரான வேகத்துடன் விறுவிறுப்பு கூட்டுகிறது. தயாரிப்பு மேற்பார்வையாளர் முகில் சந்திரனின் அர்ப்பணிப்பும் முயற்சியும் திரைப்படத்துக்கு உயிரூட்டியுள்ளது. நிர்வாகத் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சடகோபன், துணைத் தயாரிப்பாளர் அருண்ராம் கலைச்செல்வன் ஆகியோரது அசாதாரணப் பங்களிப்பு, படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றது.


நீங்கள் இன்னும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்றால் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். “ஷாட் பூட் த்ரீ” இப்போது உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Commentaires


©2020 by MediaTalks. 

bottom of page