top of page

மும்பையில் நடந்த 'டங்கி' பட சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள்

மும்பையில் நடந்த டங்கி படச் சிறப்புத் திரையிடல்! பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் கலந்துகொண்டன !!

சமீபத்தில் வெளியான டங்கி திரைப்படம் திரையரங்குகளை விழாக்கோலமாக மாற்றி வருகிறது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இதயம் வருடும் இந்தப்படைப்பு, உலகம் முழுதும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வசித்து வரும் என்ஆர்ஐ இந்தியர்களின் வாழ்வை, நெருக்கமாகப் பிரதிபலிக்கும் படைப்பாக, அவர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்த்துள்ளது டங்கி. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு நாடுகளின் துணைத் தூதரகங்களுக்குச் சிறப்புத் திரையிடல் நடத்தப்பட்டது.

பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் டங்கி திரைப்படத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தன, இந்த படம் உண்மையில் அதன் அழுத்தமான கதையினால், ஒரு அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மக்களுக்குத் தேவையான கருத்தையும் சொல்லியுள்ளது. பலரும் இப்படத்தின் கதையைப் பாராட்டி வருகிறார்கள், குறிப்பாக, உலகளாவிய பார்வையாளர்கள் தங்கள் வாழ்வோடு பொருத்திப்பார்த்துக்கொள்ளும்படி அவர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது


இப்படம். சட்டத்திற்குப் புறம்பாக நாடு தாண்டுவதைப் பற்றிப் பேசும் இப்படத்தை பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் பார்ப்பது மிகவும் பொருத்தமானது. ஹங்கேரி, அமெரிக்கா, இங்கிலாந்து, வெல்ஷ், பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சுவிஸ், ஸ்பெயின், துருக்கி, இஸ்ரேல், தென் கொரியா, பின்லாந்து, மொரிஷியஸ், ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் திரையிடலில் கலந்து கொண்டனர். . இந்த காட்சியில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும் கலந்து கொண்டார்.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு 'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.


இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page