top of page

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலக்கும், இசையமைப்பாளர் தமன் !!

  • mediatalks001
  • Aug 28, 2023
  • 1 min read

ree

சூப்பர் சிங்கர் ஜூனியர் பாடகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்து வரும் தமன் !!


சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாக பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ் தந்து வருகிறார். பல பாடகர்களுக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை தரும் வாய்ப்பை வழங்கி வருகிறார். இசையமைப்பாளார் தமனின் இந்த செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.


தமிழ்நாட்டு இளம் இசைத் திறமையாளர்களின் வாழ்வில் மாற்றத்தை தந்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சிறுவர்களுக்காக தற்போது நடந்து வரும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசனில் தான், நீதிபதியாக கலந்துகொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். பொதுவாக பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடுவர்கள் பாடகர்களிடம் இறுக்கமாகவும், கண்டிப்பாகவும் நடந்து கொள்வார்கள். ஆனால், இதற்கு முன்பு கலந்துகொண்ட நீதிபதிகள் போல் அல்லாமல், போட்டியாளர்களோடு மிக எளிமையாக பழகுவது, அவர்களுக்கு ஊக்கம் தருவது, சர்ப்ரைஸ் தருவது, சுவாரஸ்யமான கமெண்ட்கள் தந்து உற்சாகப்படுத்துவது, என அசத்தி வருகிறார் தமன்.



ree

இந்த சீசன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக உறுதிளியத்த இசையமைப்பாளர் தமன், கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.


கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில், ஹரிணி, ரிச்சா ஆகிய இரு பாடகர்கள் “ஊர்வசி ஊர்வசி” பாடலை மிக அற்புதமாக பாடினார்கள். அவர்கள் பாடிய வீடியோவை, கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பகிர்வதாக வாக்குறுதி தந்தார் தமன்.


கௌரவ் எனும் பாடகர் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடலை பாடினார். அதில் இம்ப்ரெஸ் ஆன தமன், அனிருத் மற்றும் தளபதி விஜய்யிடம் கூட்டிப்போவதாக வாக்குறுதி தந்தார்.



ree

இதுமட்டுமல்லாமல் பிரபல பாடகர் ஆண்டனி தாஸ், தமனிடம் வாய்ப்புக் கேட்க அவருக்கு ஒரு புதிய தெலுங்குப் படத்தில் பாடல் வாய்ப்புத் தந்துள்ளார். அந்தப்பாடல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.


தமன் நீதிபதியாக அல்லாமல், அனைவருடனும் மிக சகஜமாக பழகி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.


மேலும் ஒரு ஆச்சர்யமாக இசையமைப்பாளர் தமனின் மனைவி, அவருக்கே தெரியாமல் சர்ப்ரைஸாக நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார். அப்போது யாரும் அறியாத, தமனின் பல பர்ஸனல் பக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது தான், ஓய்வு நேரத்தில் தமன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மா கா பாவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் செய்தியை பகிர்ந்தார்.



ree

முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி, கலகலப்போடும் பல நெகிழ்ச்சி சம்பவங்கள் நிறைந்ததாகவும், அற்புதமானதாக நடந்து வருகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page