top of page

காரைக்குடி அருகில் தெக்கூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்!


காரைக்குடி அருகே உள்ள ஆரம்ப பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்


நமது இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்த கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காரைக்குடி அருகில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.



தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.


இன்று சுதந்திர தினம் என்பதால் காரைக்குடி அருகில் தெக்கூரில் உள்ள விசாலாட்சி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட விஷால் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியும், சிறப்புமிக்க ஆசிரியர் பெருமக்கள் மத்தியில் திறமையான மாணவியர் செல்வங்களுடன் சிறப்புரை ஆற்றினார்



அதைத் தொடர்ந்து 200 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி உபரணங்களை தனது தேவி அறக்கட்டளை சார்பில் வழங்கினார் விஷால்.

Kommentare


bottom of page