’வாரண்ட்’ இணைய தொடர்- விமர்சனம்
- mediatalks001
- 2 days ago
- 2 min read

சிவன் பிக்சர்ஸ், எஸ் ஸ்டியோஸ் – பிரசாந்த் பாண்டியராஜ், பி.விஷால், பி.எம்.ஆதீஷ்வர் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் ’வாரண்ட்’ இணைய தொடர்
பிரசாந்த் பாண்டியராஜ், நர்மிதா.எம்.வி, சாயா தேவி, அருள்ஜோதி, பாலாஜி சக்திவேல், கெளசல்யா, அருள்தாஸ், மீனா, ஹெலோ கந்தசாமி ஆகியோரது நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
திருச்சியில் வாழ்ந்து வரும் ஒய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி சக்திவேல் தனது ஒரே மகனான பிரசாந்த் பாண்டியராஜை அரசு ஊழியராக அரசு வேலையில் சேர்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அரசு வேலைக்கான பல அரசு தேர்வுகளை பிரசாந்த் பாண்டியராஜை எழுத சொல்கிறார்.
ஆனால் எந்த தேர்விலும் பிரசாந்த் தேர்வு பெறாமல் போக கடைசியில் காவல்துறையில் பணியாற்றும் தன் மைத்துனரான காளி வெங்கட் மூலம் அவரை போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆக்குகிறார்.
திருச்சியில் உள்ள பொன்மலைக்கோட்டை காவல் நிலையத்தில்
கான்ஸ்டபிளாக பிரசாந்த் பாண்டியராஜ் பணியில் சேர்கிறார்.
காவலராக வேலைக்கு சேர்ந்த பிறகு பிரசாந்த் பாண்டியராஜுக்கு நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்படும் ஒரு கைதியை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அந்த கைதி பிரசாந்த் பாண்டியராஜை தாக்கி விட்டு தப்பித்து விடுகிறார்.
கைதி தப்பித்து விடுவதால் அவமானப்படும பிரசாந்த் பாண்டியராஜ் மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிறார்.
இதனால் மனமுடைந்த பிரசாந்த் பாண்டியராஜ் போலீஸ் வேலையை விடவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மாமா காளி வெங்கட் மூலம் அப்பா பாலாஜி சக்திவேலுக்கு பிரசாந்த் பாண்டியராஜின் பிரச்சனை தெரிய வருகிறது.
பாலாஜி சக்திவேல் தன்னுடைய மகனிடம் எந்த இடத்தில் அவமானப்பட்டாயோ அந்த இடத்தில் உன்னுடைய திறமையையும் வளர்ச்சியையும் நிரூபிக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் பாலாஜி சக்திவேலின் அறிவுரையை ஏற்று நிலுவையில் இருக்கும் முடிக்க முடியாத வாரண்ட் வழக்குகளை கையில் எடுப்பவர் அதில் வெற்றி பெறுவதோடு தான் யார்? என்பதை நிரூபிக்கிறார்.
இச் சுழலில் காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் இவரை ஆச்சர்யத்துடன் பார்க்கும் நிலையில் போதை பொருள் வழக்கில் கைதாகும் சில மாணவர்களை பிரசாந்த் பாண்டியராஜ் கடுமையாக அடித்து விடுகிறார். இதே நேரத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் தன்னிடம் இருந்து தப்பிச் சென்ற நகை திருடனை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்குகிறார்.
இந்நேரத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் அடித்த மாணவர்களில் ஒருவர் இறந்து விடுகிறார். மாணவன் இறந்ததை பார்த்து பிரசாந்த் பாண்டியராஜ் அதிர்ச்சி அடையும் நேரத்தில் மாணவன் இறந்ததற்காக உயரதிகாரிகள் அவரை விசாரிக்க தனியே அழைக்கின்றனர் .
இறுதியில் விசாரணைக்குப்பின் பிரசாந்த் பாண்டியராஜ் மாணவன் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கபட்டாரா ? தன்னிடம் இருந்து தப்பிச் சென்ற நகை திருடனை கண்டுபிடித்து பிரசாந்த் பாண்டியராஜ் கைது செய்தாரா ? இல்லையா? என்பதுதான் ’வாரண்ட்’ இணைய தொடரின் மீதிக்கதை.
நாயகனாக கோட்டை கருப்பு சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ் இயல்பான நடிப்பில் அமைதியான குணம் கொண்ட அப்பாவி இளைஞராக அமைதியான குணம் கொண்டவராக காட்சிகள் அனைத்திலும் உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
நர்ஸாக நடித்திருக்கும் நர்மிதா.எம்.வி, விலைமாதுவாக நடித்திருக்கும் சாயா தேவி , அருள்ஜோதி கதைகேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் .
பிரசாந்த் பாண்டியராஜின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், அம்மாவாக நடித்திருக்கும் கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருள்தாஸ் நடிப்பு கவனிக்கும் வகையில் இருக்கிறது. தாய்மாமாவாக வரும் காளிவெங்கட் , காவலராக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி, கொடைக்கானல் சரவணன் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக உள்ளது .
ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
காவல் நிலையத்தில் தொடரும் லாக் -அப் மரணத்தை மைய கதையாக வைத்து ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் ஒவ்வொரு அத்தியாயம் முடியும் தருவாயில் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்குமோ என பார்வையாளர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி பல திருப்பங்களுடன் கதையை நகர்த்துவதுடன் அனைவரும் ரசிக்கும் க்ரைம் த்ரில்லராக இணைய தொடரை இயக்கியுள்ளார் இயக்குனர் இயக்குநர் விக்னேஷ் நடராஜன்
ரேட்டிங் : 4.3 / 5





Comments