top of page

'ஆரியன்’ - விமர்சனம்

  • mediatalks001
  • Oct 31
  • 1 min read

ree

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி நடிகரிடம் நேரலையில் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கும் செல்வராகவன் திடீரென்று எழுந்து துப்பாக்கி முனையில் நடிகரை

சுடுவதுடன் அந்த அரங்கிற்குள் இருக்கும் அனைவருடன் அந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.


அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன், முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் நேரடி ஒளிபரப்பில் சொல்கிறார்.


போலீஸ் மேலிடம் செல்வராகவன் செய்ய போகும் தொடர் கொலைகளை தடுக்க போலீஸ் உயரதிகாரியான விஷ்ணு விஷால் தலைமையில் தனி படை அமைக்கிறது.


விஷ்ணு விஷால் கொலையாளி செல்வராகவனை பிடிப்பதை விட்டுவிட்டு, அவர் செய்ய இருக்கும் கொலைகளை தடுப்பதற்காக முயற்சிக்கிறார்


முடிவில் விஷ்ணு விஷால் செல்வராகவன் கொல்ல இருக்கும் ஐந்து பேரை காப்பாற்றினாரா?


என்ன காரணத்திற்காக ஐந்து பேரை அவர் கொலை செய்கிறார் ? என்பதை சொல்லும் படம்தான் 'ஆரியன்’


கதையின் நாயகனாக போலீஸ் அதிகாரியாக வரும் விஷ்ணு விஷால் இயல்பான நடிப்பில் உடல் மொழியில் நேர்மையான அதிகாரியாகயும் மானாசாசெளத்ரி உடனான காதல், திருமணத்திற்கு பின் நடக்கும் பிரச்சனை, விவாகரத்து ,ஆக்க்ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


அமைதியான நடிப்பில் வில்லனாக நடித்திருக்கும் செல்வராகவன்,

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும் கதைக்கு பக்க பலம்.


தொடர் கொலைகளை தடுக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி கதையை மையமாக வைத்து மிரட்டலான சைக்கோ திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன்.கே.


ரேட்டிங் - 4.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page