top of page

’காந்தா’ - விமர்சனம்

  • mediatalks001
  • Nov 14
  • 2 min read

ree

மிக பழமையான காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மானுக்கும் அவரை நாயகனாக அறிமுகப்படுத்திய குரு இயக்குநர் சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

இந்நேரத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோ மூடும் நிலையில் இருக்க அதன் தயாரிப்பாளர் ரவீந்திர விஜய் பாதியில் நின்று போன இயக்குநர் சமுத்திரக்கனியின் கனவு படமான ’சாந்தா’ திரைப்படத்தை எடுப்பது என்று முடிவு செய்து சமுத்திரக்கனியிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இந்நிலையில் நடிப்பு சக்கரவர்த்தியான துல்கர் சல்மான் சமுத்திரக்கனியின் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். ஆனால் படத்தின் தலைப்பை காந்தா என மாற்றி கதைப்படி இயக்குநர் சமுத்திரக்கனியின் கிளைமாஸ்க் காட்சியை மாற்ற சொல்லி துல்கர் சல்மான் தயாரிப்பாளர் ரவீந்திர விஜய்யிடம் கூறுகிறார் . .

தனது கனவு கதை என்பதால், படத்தை எப்படியாவது முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி தான் எழுதிய கதையில் வரும் கிளைமாக்ஸுடன் தான் படம் முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்நேரத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸுக்கும் துல்கர் சல்மானுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.

இவர்களது காதலால் கோபமடையும் சமுத்திரக்கனி தன்னுடைய கிளைமாக்ஸ்படி படம் முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சமயத்தில் ஒரு இரவு நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் நாயகி பாக்யஸ்ரீ  

போர்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

முடிவில் நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ் கொலையான பின்னணி என்ன ? அவரை கொலை செய்த மர்ம நபர் யார்?

நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்கொலையான பின் இயக்குநர் சமுத்திரகனியின் கனவு படமான ’சாந்தா’ திரைப்படம் திரையில் வெளிவந்ததா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’காந்தா’

பழம்பெரும் நடிகர் நடிப்பு சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் இயல்பான நடிப்பில் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடை, தோற்றம், கோபம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்

பழம்பெரும் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்

முக்கிய கதாபாத்திரத்தில்அமைதியான அழகில் நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதி

துல்கர் சல்மானின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி, துல்கர் சல்மானின் மாமனாராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜானு சந்தர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

டானி சஞ்செஸ் ஒளிப்பதிவில் காட்சிகளை கருப்பு வெள்ளை காலத்திற்கு கொண்டு செல்கிறது.

இயக்குனருக்கும் , திரையுலகில் மிக பெரிய நட்சத்திரமாக வலம் வரும் நடிகருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மைய கருவாக வைத்து தெளிவான நேர்த்தியான திரைக்கதை அமைப்பில் திறமையாக பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ்


ரேட்டிங் : 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page