‘தீயவர் குலை நடுங்க’ - விமர்சனம்
- mediatalks001
- 4 days ago
- 1 min read

மன அழுத்த பிரச்சனையில் இருக்கும் பிரபல எழுத்தாளர் லோகு ஒரு இரவு நேரத்தில் மகளுடன் பேசிக்கொண்டு காரில் சென்று கொண்டிருக்கையில் இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் காரை விபத்துக்குள்ளாக்கி லோகுவை கொடூரமாக தாக்கி கொலை செய்கிறார்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுனிடம் மேலிடம் ஒப்படைக்கிறது.
இந்நேரத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவருடன் நெருக்கமாக பழக தொடங்குகிறார்.
எழுத்தாளர் லோகுவின் கொடூர கொலைக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் சம்பவம் ஒன்றுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கும் அர்ஜுன் இதனையடுத்து தொழிலதிபரான ராம்குமாரை சந்தித்து விசாரிக்கையில் அர்ஜுன் கண் முன்னே ராம்குமார் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
முடிவில் அர்ஜுன் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா ?
ஐஸ்வர்யா ராஜேஷ் யார் ? அவரது பின்னணி என்ன? என்பதை சொல்லும் படம்தான் ‘தீயவர் குலை நடுங்க’
போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார்
சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அழுத்தமான கதாபாத்திரத்தை சிறப்பான நடிப்பில் அழகாக வெளிபடுத்தியுள்ளார் .
ஐஸ்வர்யா ராஜேஷ் காதலராக வரும் பிரவீன் ராஜா , ஆட்டிசம் பாதித்த சிறுமியாக நடித்திருக்கும் அனிகா, அவரது அம்மாவாக வரும் அபிராமி , லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலமாக இருக்கிறது.
விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத வகையில் கதையை நகர்த்தி திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன்
ரேட்டிங் - 3.5 / 5








Comments