top of page

‘இரவின் விழிகள்’  - விமர்சனம்

  • mediatalks001
  • 6 hours ago
  • 1 min read

ree

முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காரில் வரும் யூடியூப் பிரபலம் ஒருவரை வழிமறித்து கொடூரமாக கொலை செய்கிறார்.


இதனையடுத்து போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், கான்ஸ்டபிள் சிசர் மனோகர் இருவரும் கொலைகாரனை தேடி அங்கு வருகிறார்கள்.


மறுபக்கம் நாயகன்  மகேந்திரா, நாயகி நீமா ரே  இருவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். சில நாட்களிலேயே இருவரும் பிரபலம் அடைகிறார்கள். இந்நிலையில்  இருவரையும் புதிய கடையை திறந்து  வைக்க 

அழைப்பு வருகிறது.


இந்நிலையில் புதிய கடையை திறந்து வைப்பதற்காக  மகேந்திரா,  நீமா ரே  இருவரும் அந்த அடைந்த காட்டு வழியாக செல்லும் போது கார் விபத்துக்குள்ளாகிறது. நாயகன் மகேந்திரா மயக்கத்தில் இருக்க  நாயகி  நீமா ரேவை முகமூடி அணிந்த மர்ம நபர் தூக்கி சென்றுவிடுகிறார்.


முடிவில் முகமூடி மனிதரிடம் இருந்து நாயகி நீமா ரேவை

மகேந்திரா காப்பாற்றினாரா? 


முகமூடி அணிந்த மர்ம மனிதர் யார்? அந்த மர்ம மனிதர்  யூடியூப்  பிரபலங்களை  கொலை செய்வதற்கான காரணம் என்ன?


போலீஸ் முகமூடி மனிதரை கைது செய்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான்   ‘இரவின் விழிகள்’ 

கதைநாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன் அறிமுக நாயகனாக கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.  

‘பிங்காரா’ என்ற கன்னட படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது  பெற்று நாயகியாக நடித்திருக்கும் நீமா ரே கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.

கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் தங்கை மீது பாசம் கொண்ட அண்ணனாக அனைவரின் மனதில் இடம் பிடிக்கிறார்.


நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ஏ.எம்.அசார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை. “கருப்பு…” பாடல்  கவனிக்க வைக்கிறது. பின்னணி இசை  கதைக்கு ஏற்றவாறு உள்ளது. 


பாஸ்கர் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.


சமூக  வலைத்தளங்களால் ஒரு குடும்பம் எப்படி  பாதிப்புக்குள்ளாகிறது, என்பதை மைய கருவாக வைத்து சமூக அக்கறையோடு  சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக பதிவு  செய்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் 


ரேட்டிங்: 3/5


Comments


©2020 by MediaTalks. 

bottom of page