MediaTalks Logo
Header Advertisement
reviews
13 June 2026 at 13:57•1 Views

’ஆட்டி’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
’ஆட்டி’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன்    தயாரிப்பில் இயக்குநர் கிட்டு இயக்கத்தில் ’ஆட்டி’

அபி நக்ஷத்ரா, இசக்கி கார்வண்ணன், காதல் சுகுமார், சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிசாமி  , செல்வகுமார் ,கரண் சக்ரவர்த்தி , ஆலன் கிருஷ்ணா , சிது குமரேசன் ,ஆனந்த் சௌந்தரராஜன் ,நேசன் ,குயிலி நாச்சியார் ,உதய சுமதி ,நிலா, சுமித்ரா தேவி ,ஆஷிகா ஆகியோர் நடித்துள்ளனர் .

’1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெறும் கதையாக மதுரையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கண்டிப்புமிக்க இன்ஸ்பெக்டராக இசக்கி கார்வண்ணன் பணியாற்றி வருகிறார் .

இவரது பிடியில் சிக்கிய பாலியல் குற்றவாளி ஒருவனை இசக்கி கார்வண்ணன் என்கவுன்டர் செய்ய மேலிடத்தால் மலை கிராமமான செங்காடு காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறார்.

புதிய காவல் நிலையத்திற்கு செல்லும் இசக்கி கார்வண்ணன் அங்கு எந்த ஒரு குற்றச் சம்பவங்களும் நடக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறார்.

இதே கிராமத்தில் வசிக்கும் சிறுவ - சிறுமியர்களுக்கு படிப்பு கற்று தர வாத்தியார் இல்லாததால் நாயகி அபி நக்ஷத்ரா அங்கிருக்கும் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கிறார்.

இந்நிலையில் மலை வாழ் கிராம மக்கள் அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்நேரத்தில் அந்த கிராமத்திற்கு புதியதாக பள்ளி ஆசிரியராக பிரவீன் பழனிசாமி அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்.

மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பிரவீன் பழனிசாமி வந்த நான்கு நாட்களில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

இ

தனையடுத்து இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் இந்த கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க பல அதிர்ச்சி தரும் தகவல்கள் அவருக்கு கிடைக்கிறது.

இறுதியில் ஆசிரியர் பிரவீன் பழனிசாமியை கொலை செய்த கொலையாளி யார் ? இசக்கி கார்வண்ணன் கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்தாரா ? இல்லையா? என்பதுதான் ’ஆட்டி’ படத்தின் மீதிக்கதை.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் ஆர்ப்பாட்டமில்லாத அமையான நடிப்பில் நேர்மையான அதிகாரியாக கொலைகாரனை கண்டுபிடிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பாராட்டுக்குரிய நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறுவதற்காக துணை நிற்கும் கதாபாத்திரத்தில் மனதை கவர்கிறார் .

எப்போதும் தூங்கி வழியும் கதாபாத்திரத்தில் போலீசாக வரும் காதல் சுகுமார்,அஞ்சல்காரர் சௌந்தர், பள்ளி ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,காவலராக வரும் செல்வகுமார் ,கரண் சக்ரவர்த்தி , ஆலன் கிருஷ்ணா , சிது குமரேசன் ,ஆனந்த் சௌந்தரராஜன் ,நேசன் ,குயிலி நாச்சியார் ,உதய சுமதி ,நிலா, சுமித்ரா தேவி ,ஆஷிகா என மற்ற வேடங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தீசனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

சிபி சதாசிவம் ஒளிப்பதிவு கதையோடு நம்மை பயணிக்கும் வகையில் இருக்கிறது.

இளம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன் கொடுமை குற்றங்களை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்குமோ என்று யூகிக்க முடியாத விதத்தில் மர்மங்கள் கலந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் திகிலுடன் சஸ்பென்ஸ் திரில்லராக அனைவரும் ரசிக்கும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கிட்டு.

ரேட்டிங் - 3.3 / 5

மொத்தத்தில் ’ஆட்டி’ –அநீதியை வேரோடு அறுக்கும் பெண் தெய்வங்கள்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: