top of page

’சாருகேசி ’ - விமர்சனம்

  • mediatalks001
  • 3 days ago
  • 2 min read

E5 என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அருண்.ஆர் தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ’சாருகேசி ’


ஒய்.ஜி.மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் நடித்துள்ளனர் .


மத்திய அரசின் உயர் விருதுகளை பெற்று கர்நாடக இசைத் துறையில் புகழ்பெற்ற பாடகராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவி சுஹாசினி, மகன் ராஜ் அய்யப்பா மற்றும் உதவியாளர் தலைவாசல் விஜய்யுடன் வாழ்ந்து வரும் நிலையில் ராஜ் அய்யப்பா சில நேரங்களில் குடி போதையில் ஒய்.ஜி.மகேந்திரனை மதிக்காமல் அவமானத்தை பெற்றுத் தருகிறார்.


இந்நிலையில் மேல் நாட்டு இசையில் தேர்ச்சி பெற்ற ராஜ் அய்யப்பாவிடம் பாட வாய்ப்பு தேடி வருகிறார் ரம்யா பாண்டியன் .

ஆரம்பத்தில் நட்பான ராஜ் அய்யப்பா,,, ரம்யா பாண்டியன் மீது காதல் கொள்ள இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.


இதே சமயம் ஸ்டுடியோ ஒன்றை வாங்குவதற்காக ராஜ் அய்யப்பா தனியாக பெங்களூர் செல்கிறார்.


இதனையடுத்து மருமகள் ரம்யாபாண்டியன் ஒய்.ஜி.மகேந்திரனிடம் ராஜ் அய்யப்பா உங்களுக்கு பிறந்தவர் இல்லை அவரது தந்தை வேறொருவர் என்ற உண்மையை கூறுகிறார்.


இந்த உண்மையை கேட்டு அதிர்ச்சி அடையும் ஒய்.ஜி.மகேந்திரன் , ரம்யா பாண்டியனை பற்றி தெரிந்து கொள்ள அவர் வாழ்ந்த இடத்திற்கு செல்கிறார் .


அவரை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்ட ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு கட்டத்தில் மயக்கம் அடைய அவரை மருத்துவர் ஜெயபிரகாஷிடம் அழைத்துச் செல்கிறார் டிரைவரான தலைவாசல் விஜய்


அங்கு ஒய்.ஜி.மகேந்திரனை பரிசோதிக்கும் ஜெயபிரகாஷ் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை தலைவாசல் விஜய்யிடம்

கூற அதனை கேட்டு ஒய்.ஜி.மகேந்திரன் அதிர்ச்சி அடைகிறார்.

இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் ஒய்.ஜி.மகேந்திரன் அனுமதிக்கபடுகிறார் ..


இறுதியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மருத்துவ மனையில் இருந்து நலம் பெற்று மீண்டு வந்தாரா? மருமகள் ரம்யா பாண்டியன் யார் ? என்ன காரணத்திற்காக ஒய்.ஜி.மகேந்திரனை எதிரியாக பார்க்கிறார் ? ராஜ் அய்யப்பா ஒய்.ஜி.மகேந்திரன் தன் உண்மையான தந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்டாரா ? என்பதுதான் ’சாருகேசி ’ படத்தின் மீதிக்கதை.


கர்நாடக பாடகர் சாருகேசியாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் அனுபவ நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே மனைவி மீது கொண்ட பாசம், மதிக்காத மகனை ஏற்றுக் கொள்ளும் விதம் , தலைவாசல் விஜய்யை உடன் பிறந்த தம்பி மாதிரி பார்க்கும் குணம், பாடல் பாடும் போது வெளிப்படுத்தும் உணர்வுகள் என அனைத்திலும் அந்த கதாபாத்திரமாகவே படம் முழுவதும் வாழ்த்திருக்கிறார்.


சாருகேசி மனைவியாக வரும் சுஹாசினி மணிரத்னம் குடும்ப தலைவியாக சிறப்பாக நடித்துள்ளார்.


முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ் கதை அடுத்த

கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு துணை நிற்கிறார்.


சமுத்திர கனி ,தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் என மற்ற கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் தேவாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

சஞ்சய் பி எல் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.


குடும்ப பின்னணியில் கர்நாடக இசை பாடகரின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையுடன் குடும்பத்தில் புரிதலின் முக்கியத் துவத்தை உணர்த்தும் வகையில் திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும் கர்நாடக இசைப் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர்

சுரேஷ் கிருஷ்ணா.


மொத்தத்தில் – ’சாருகேசி ’ – ஒரு பாடகனின் பயணம்


ரேட்டிங் - 2.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page