MediaTalks Logo
Header Advertisement
reviews
14 June 2026 at 21:29•1 Views

‘வள்ளுவன்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘வள்ளுவன்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

சென்னையில் ஒரு இரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்த அரசியல்வாதி ஒருவரை மர்ம மனிதர் கொடூரமாக கொலை செய்வதோடு அவர் உடலில் புரியாத சில தமிழ் வார்த்தைகளை எழுதிவிட்டு செல்கிறார்.

இந்நிலையில் நாயகன் சேத்தன் சீனு உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். அதே நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் நல்ல குணம் கொண்டவராக இருக்கிறார் .

இதே சமயம் நாயகி ஆஷ்னா சாவேரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு பல உதவிகளை செய்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் .

ஒரு கட்டத்தில் இளம் வயதில் நாயகி ஆஷ்னா சாவேரியின் சேவை செய்யும் மனப்பான்மையை பார்த்து வியக்கும் சேத்தன் சீனு, அவருக்கு உதவியாக அவரை போலவே அந்த இல்லத்தில் உதவிகளை செய்கிறார். இதனால் இருவரும் நட்பாக பழகுகிறார்கள்.

இந்நேரத்தில் பெரும் தொழில் அதிபரின் மகன் பார்க்கும் இளம் பெண்களை தன் பேச்சினால் வசப்படுத்தி பாலியல் வன் கொடுமை செய்கிறார் .ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டரும் அவர் செய்யும் சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறார் .

இதற்கிடையே அரசியல்வாதியின் கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொலை செய்யப்படுகிறார். அவர் உடலிலும் புரியாத சில தமிழ் வார்த்தைகளை எழுதிவிட்டு செல்கிறார் மர்ம மனிதன் .

இந்த தொடர் கொலை வழக்கு காவல்துறை அதிகாரி பிரேம் குமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் வழக்கை கையில் எடுத்த சில நாட்களில் அதே பாணியில் பிரபல வழக்கறிஞர் ஒருவரும் கொலை செய்யப்பட, கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வைத்து அது திருக்குறள் என்று கண்டறியும் பிரேம்குமார், கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்ற அதன் அர்த்தத்தையும் கண்டுபிடிக்கிறார

இந் நிலையில் நாயகன் சேத்தன் சீனு போலீசாரிடம் சகஜமாக பழகி அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்.

ஏன் எதற்காக சேத்தன் சீனு போலீசாரிடம் சகஜமாக பழகுகிறார் என பிரேம்குமாருக்கு அவர் சந்தேகம் எழுகிறது.

தனி போலீஸ் படை அமைத்து சேத்தன் சீனுவை பின் தொடர்கிறார் பிரேம்குமார்.

இச் சுழலில் இளம் பெண்களை பாலியல் வன் கொடுமை செய்யும் பெரும் தொழில் அதிபரின் மகனை ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கொலையானவர்களின் பாணியில் கொல்ல போவதாகவும் முடிந்தால் அவரை காப்பாற்றுங்கள் என மர்ம மனிதரால் போலீஸ்க்கு மிரட்டல் வருகிறது .

அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரேம்குமார் சேத்தன் சீனுவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்கிறார்.

சேத்தன் சீனு விசாரணை கைதியாக காவல் நிலையத்தில் இருக்கும்போது தொழில் அதிபரின் மகன் மர்ம மனிதன் சொன்ன நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கொல்லப்படுகிறார் .

இறுதியில் தொழில் அதிபரின் மகனை கொன்ற மர்ம கொலையாளி யார் ? போலீஸ் அந்த மர்ம கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்தார்களா ? தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘வள்ளுவன்’

வட சென்னை இளைஞராக நாயகனாக நடித்திருக்கும் சேத்தன் சீனு, இளமை துடிப்பு மிக்க இளைஞராக காதல் ,குத்தாட்டம் ஆக்‌ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி இயல்பான நடிப்பில் கதையின் எதிர்பாராத திருப்பத்திற்கு துணை நிற்கிறார் .

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், காவலராக நடித்திருக்கும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும் , இசையமைப்பாளர் அஸ்வத் இசையும் படத்திற்கு பக்க பலம் .

பாலியல் வன்கொடுமையை மையமாக கொண்ட கதையுடன் பெண்களுக்கு எதிராக அநீதி இழை ப்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படாமல், அதிகாரமும், சட்டமும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக இருப்பதை அழுத்தமாக பதிவு செய்வதுடன் , வக்கிர புத்தி கொண்ட இது போன்ற குற்றவாளிகளுக்கு சட்டத்தை தாண்டிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமுக விழிப்புணர்வுடன் வலியுறுத்தி அனைவரும் ரசிக்கும் தரமான படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் சங்கர் சாரதி.

மொத்தத்தில், ‘வள்ளுவன்’ அநீதியை அழிப்பவன்

ரேட்டிங்- 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: