MediaTalks Logo
Header Advertisement
reviews
10 July 2026 at 08:18•1 Views

‘ராவ் பகதூர்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘ராவ் பகதூர்’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

ஸ்ரீசக்ராஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ், A+S மூவிஸ், பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன் ஃபண்ட், மஹாயானா மோஷன் பிக்சர்ஸ் சார்பில் சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, ஈஷ்வரன் விஜயராகவன் தயாரிப்பில் இயக்குநர் வெங்கடேஷ் மஹா இயக்கத்தில் ‘ராவ் பகதூர்’

சத்ய தேவ், விகாஸ் முப்பாலா , தீபா தாமஸ் , பால பராசர் , ஆனந்த்  பாரதி , பிரணய் வக , மாஸ்டர் கிரண் ஆகியோர் நடித்துள்ளனர் .

அரச வம்சத்தை சேர்ந்த நாயகன் சத்யதேவ் மிக பெரிய அரண்மனை பங்களாவில் வயதான காலத்தில் மனநலப் பிரச்சனையால் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனது இறுதி நாட்களை கழித்து வருகிறார்.

அவரது காதல் மனைவியான நாயகி தீபா தாமஸ் தன் மீது அதிகம் பாசம் வைத்த அவரது இரண்டாவது மகன் மாஸ்டர் கிரண் எதிர்பாராதவிதத்தில் மரணமடைய அதன் பிறகு அந்த பங்களாவில் ஒரு அறைக்குள் தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்கிறார்.

இச் சுழலில் சத்யதேவுக்கு சில ஆண்டுகளாக தன் மனதுக்குள் இருக்கும் ஒரு பெரிய சந்தேகமான மாஸ்டர் கிரண் தன் மகன்தானா என தெளிவாக தெரிந்தால் நான் நிம்மதியாக இறந்து விடுவேன் என தனது நண்பரும், மருத்துவருமான விகாஸ் முப்பாலாவிடம் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாரதி வேறொரு நபரை அரண்மனைக்கு அழைத்து வந்து இவர்தான் மாஸ்டர் கிரணின் தந்தை என்று கூற இதை கேட்டு அதிர்ச்சி அடையும் சத்யதேவ் இறந்தது தன்னுடைய மகன்தான் என்று சில ஆதாரங்களை கொடுக்கிறார் .

ஆனால் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாரதி மாஸ்டர் கிரண் சத்யதேவ் மகன்தானா என்பதை உறுதி செய்ய அடுத்த கட்ட நடவடிக்கையாக DNA பரிசோதனை செய்ய உத்தரவிடுகிறார் .

இறுதியில் மாஸ்டர் கிரண் தன் மகன்தான் என நிரூபிக்க சத்யதேவ் நீதிமன்றம் செல்கிறார் .

முடிவில் சத்யதேவ் தன் இரண்டாவது மகன் மாஸ்டர் கிரணின் மீதான வெறுப்புக்கு என்ன காரணம் ? நீதிபதி முன் மாஸ்டர் கிரணை தன் மகன்தான் என நீதிமன்றத்தில் நிரூபித்தாரா ? இல்லையா என்பதுதான் ‘ராவ் பகதூர்’ படத்தின் மீதிக்கதை.

ராமப்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் சத்யதேவ் இயல்பான நடிப்பில் உடல் மொழியில் வயது, தோற்றம், கோபம், அழுகை என அனைத்து காட்சிகளிலும் கதையுடன் இணைந்து உணர்வுப் பூர்வமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சத்யதேவ் காதல் மனைவியாக நடித்திருக்கும் தீபா தாமஸ் எதார்த்த நடிப்பில் கவனத்தை கவர்கிறார் . படத்தின் இறுதிக்காட்சியில் ஆச்சரியத்துடன் அனைவரையும் அதிர வைக்கிறார் .

டாக்டர் ஆச்சாரியாக நடித்திருக்கும் விகாஸ் முப்பாலா , வீட்டு வேலை செய்பவராக நடித்திருக்கும் பாலா பராசர், இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்த் பாரதி , மூத்த மகனாக நடித்திருக்கும் பிரணய் வக , இளைய மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் கிரண் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஸ்மரன் சாய் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பர்மார் ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

1968 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில் அரண்மனையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட கதையுடன் நேர்த்தியான திரைக்கதை அமைப்பில் சாதி வெறி, நிற வெறி மற்றும் ராஜ பரம்பரையின் ஆணவ ப் பாகுபாடுகளை அழுத்தமாக சொல்வதுடன் அழகிய கலை படைப்புடன் அனைவரும் ரசிக்கும் மாறுப்பட்ட கதையாக திரை ப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வெங்கடேஷ் மஹா,

மொத்தத்தில் ‘ராவ் பகதூர்’ – ரசிக்கும்படியான பிரம்மாண்ட தெலுங்கு படைப்பு

ரேட்டிங் : 4 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: