’இதயம் முரளி’ - விமர்சனம்
- mediatalks001
- 1 day ago
- 2 min read

டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் ’இதயம் முரளி’.
அதர்வா முரளி, பகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நடராஜ், தமன் எஸ் ,நிஹாரிகா , சின்னி ஜெயந்த்,ரக்சன், டிராவிட் ,ஏஞ்சலின் அஞ்சுகுரியன், சுதாகர் , யாஷாஸ்ரீ ,ஜொனிதா காந்தி ஆகியோர் நடித்துள்ளனர் .
திருச்சியில் தன் மாமா நட்டி நட்ராஜுடன் வாழ்ந்து வரும் அதர்வா வாழ்க்கையின் வெவ்வேறு பருவங்களில் மலர்ந்த காதல்கள் அனைத்தும் வெற்றி பெறாததால், தன் மாமா நட்டி நட்ராஜ் நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்
இந்நிலையில் அதர்வாவின் திருமண ஏற்பாடுகளை நட்டி தீவிரமாக செய்து வரும் நிலையில் திருமணத்திற்கு முன் நண்பர்களுடன் அமெரிக்கா செல்கிறார் .
சில நாட்களுக்கு பின் தனது நண்பர்களுடன் விமானத்தில் இந்தியா திரும்பும் அதர்வா, அதே விமானத்தில் பயணிக்கும் பகத் பாசிலை சந்திக்கிறார்.
இருவரது சந்திப்பில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு தலை காதல் கதைகளை பகத் பாசிலிடம் சுவாரஸ்யமாக அதர்வா சொல்கிறார்.
திருச்சியில் பள்ளியில் படிக்கும்போது டியூஷன் வகுப்பில் ப்ரீத்தி முகுந்தனை முதன்முதலாகப் பார்க்கும் அதர்வா, அவர்மீது காதல் கொள்கிறார். ப்ரீத்தி முகுந்தனுக்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து காதலிக்கும் நேரத்தில் ஒருநாள், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அதர்வாவை வீட்டிற்கு அழைக்கிறார் ப்ரீத்திமுகுந்தன் .
அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது காதலை வெளிப்படுத்த நினைக்கும் அதர்வாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக ப்ரீத்தி முகுந்தன் இரட்டைப் பிறவி சகோதரிகள் என அவருக்கு தெரிய வருகிறது .
இந்நிலையில் இருவரும் ஒரே மாதிரி தோற்றமளிப்பதால் தான் காதலித்தது யாரை என்றே தெரியாமல் அதர்வா குழப்பமடைந்து தன் காதலை
சொல்லாமலே அங்கிருந்து செல்கிறார்.
பின்னர் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் அதர்வா, மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் கயாடு லோஹரைப் பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார் .அவருடன் நட்பாகப் பேசி, நெருக்கமாகப் பழகினாலும், தனது மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார் .
கல்லூரிப் படிப்பு முடிந்ததும், கயாடு லோஹர் தன் ஊருக்குப் புறப்படும்போது அவரை வழியனுப்புவதற்காக ரயில் நிலையத்துக்குச் செல்லும் அதர்வா தனது காதலை வெளிப்படுத்த உறுதியுடன் இருக்கும் தருணத்தில் ஒரு தயக்கத்தினால் கயாடு லோஹர் மேல் கொண்ட காதலும் ஒரு தலை காதலாய் மாறுகிறது.
முடிவில் நட்டி நட்ராஜ் நிச்சயித்த பெண்ணை அதர்வா திருமணம் செய்து கொண்டாரா ? அதர்வா திருமணத்தில் கலந்து கொண்ட பகத் பாசில் என்ன செய்தார் ? என்பதுதான் ’இதயம் முரளி’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அதர்வா முரளி இயல்பான நடிப்பில் இளமை துள்ளலுடன் பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், இளைஞர் என உடல் மொழியில் சிறப்பான தோற்றங்களுடன் காதல் காட்சிகளில் ரசிக்கும்படியான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் கதைகேற்றபடி காதலின் அழகியலுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
அதர்வாவின் மாமாவாக நடித்திருக்கும் நட்டி நடராஜின் வழக்கமான நடிப்பில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பகத் பாசில், தமன் எஸ்., நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்
இசையமைப்பாளர் தமன். எஸ் இசையில் உருவான அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமை.
அவரது பின்னணி இசை கதையுடன் இணைந்து காட்சிகளின் உணர்வை மேலும் உயர்த்துகிறது.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு பிரமாண்டமாகவும் அழகிய காட்சியமைப்புகளுடனும் அமைந்துள்ளது.
நாயகனின் ஒரு தலையான காதல் தோல்விகளுடன் அவற்றின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாகக் கொண்ட கதையுடன் காதல், தவிப்பு ,பாசம், நட்பு, நகைச்சுவை என அனைத்தும் கலந்த விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.
மொத்தத்தில் ’இதயம் முரளி’ – இளமை துள்ளலான அழகிய காதல்
ரேட்டிங் : 3 / 5





Comments