top of page

'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ - விமர்சனம்

  • mediatalks001
  • 2 days ago
  • 2 min read

2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர்  தயாள் பத்மநாபன் இயக்கத்தில்  ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’.


வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சகா, மாறன், சரவணன், லிஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர் .


நீதிமன்றத்தில் கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி அருவி மதனுக்கு நீதிபதி கன்யா பாரதி மரண தண்டனை வழங்க இருக்கும் நிலையில் ஒரு குழப்பம் அவரை தீர்ப்பு எழுத விடாமல் தடுக்க அருவி மதனின் வழக்கிற்கான இறுதி தீர்ப்பை மறுநாளைக்கு ஒத்தி வைக்கிறார்.


இச் சுழலில் நீதிபதி கன்யா பாரதி மரண தண்டனை கைதியான நாயகன் வெற்றியின் சுயசரிதை புத்தகத்தை படிக்க தொடங்குகிறார்.


1972 ஆம் ஆண்டு விழுப்புர மாவட்டத்தில் வாழும் லிசி ஆண்டனி தனது மகனான வெற்றியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். இவரது கணவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு பொழுதை கழித்து வருகிறார்.

வெற்றி படித்த படிப்பிற்கான அரசாங்க வேலையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.


இதே சமயம் லிசி ஆண்டனி கவிதா பாரதியிடம் வட்டிக்கு பணம் வாங்கி விட்டு வட்டியை செலுத்தாததால் வெற்றியின் குடும்பத்தினரை அவமானமாக பேசுகிறார் .


இந்நிலையில் வெற்றி தன் நண்பரான லொள்ளு சபா மாறனிடம் பணம் கேட்க திருட்டு வேலை செய்யும் மாறன் வெற்றிக்கு உதவி செய்கிறார்.

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வறுமையில் சிக்கித்தவிக்கும் நாயகன் வெற்றி லொள்ளு சபா மாறனின் பேச்சை கேட்டு திருடுகிறார். வேலை கிடைக்கும் வரை அதையே தன் தொழிலாக மாற்றிக் கொள்கிறார் .


சிறிய திருட்டு வேலைகளை செய்யும் வெற்றி அதே ஊரில் வசிக்கும் நாயகி பிரிகிடாவை பார்த்ததும் காதல் கொள்ள இருவரும் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்கிறார்கள்.


வெற்றி இரண்டு குழந்தைக்கு தந்தை ஆனதும் திருட்டு தொழிலை விட்டு விட்டு கிடைக்கும் வேலையை செய்து கொண்டு வாழ நினைக்கிறார்.


இந்நேரத்தில் நாயகி பிரிகிடாவின் சம்மதத்துடன் கவிதா பாரதியின் வீட்டில் இருக்கும் தனது நில பத்திரத்தை எடுத்து வருவதற்காக அங்கு செல்லும் வெற்றி காம வக்கிர புத்தியுள்ள கவிதா பாரதியை கொலை செய்து விடுகிறார்.

கவிதா பாரதியை கொலை செய்தவுடன் தானே முன் வந்து காவல் துறையிடம் சரணடைந்து விடுகிறார் வெற்றி .


இக் கொலை வழக்கை விசாரிக்கும் நீதி மன்றம் வெற்றிக்கு தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறது .


இறுதியில் நாயகன் வெற்றி வக்கிர புத்தியுள்ள கவிதா பாரதியை கொலை செய்ய காரணம் என்ன ? தூக்கு தண்டனை கைதியான நாயகன் வெற்றிக்கு நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்றியதா ?

நீதிபதி கன்யா பாரதி மதனுக்கு தீர்ப்பளிக்கும் நேரத்தில் ஒரு சிந்தனையுடன் இருப்பது ஏன்? என்பதுதான் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் மீதிக்கதை.


அறிவுமதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி இயல்பான நடிப்பில் படித்த இளைஞராகவும் , அம்மா மீது பாசம் வைத்திருப்பவராகவும் , மனைவி மீது கொள்ளும் காதல் ,மேலும் நீதிக்காக போராடும் குணம் என அனைத்திலும் உணர்வுபூர்வமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்


நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சகா, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் , கணவன் மீது அக்கறை கொண்ட மனைவியாகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


நீதிபதியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கன்யா பாரதி வில்லனாக நடித்திருக்கும் கவிதா பாரதி ,சிறை அதிகாரியாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, ஆசிரியராக வரும் சரவணன் , வெற்றியின் அம்மாவாக வரும் லிசி ஆண்டனி, அருவி மதன், சுப்ரமணிய சிவா என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.


ஒளிப்பதிவாளர் எம்.கே .பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு சிறைச்சாலை மற்றும் நீதிமன்ற , அழகான கிராமத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.


உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து கொலைக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுப்பது சரியா என்பதை மையமாக கொண்ட கதையுடன் நாட்டில் மரண தண்டனை அறவே நீக்கப்பட வேண்டும், என்ற தனது கருத்தை சொல்வதுடன் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையும் ஒரு கொலை தான் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்து ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரும் ரசிக்கும் விதத்தில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் தயாள் பத்மநாபன்


மொத்தத்தில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ – மனித நேயம்தான் மரணத்தை வெல்லும்


ரேட்டிங் : 3. 2 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page