top of page

’போட்டோகிராபர்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 12 hours ago
  • 2 min read

அப்துல் பஷீத் சையத் தயாரிப்பில் அஷ்ரஃப் இயக்கத்தில் ’போட்டோகிராபர்’


அஷ்ரஃப், ஜனனி சாமிநாதன், கருணாகரன், உறியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர் .


தொழிலதிபர் ஆடுகளம் நரேனின் மகனான புகைப்படக் கலைஞர் நாயகன் அஷ்ரஃப் புகைப்படக் கலையில் உலக அளவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வாழும் நிலையில் ஆடுகளம் நரேன் தனக்கு பிறகு தனது நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என விரும்புகிறார்.


அதனை விரும்பாத அஷ்ரப் நண்பன் கருணாகரன் சொல்வதன் மூலம் கொடைக்கானல் அருகே உள்ள மர்மமான அடர்ந்த காடான மதிகெட்டான் சோலையில் இருக்கும் அரிய மரமான தங்க மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.


மலை கிராம மக்கள் அனைவரும் மதிகெட்டான் சோலையின் மர்மத்தையும் அங்கு சென்றவர்கள் அனைவரும் மாயமானதை அஷ்ரஃப்பிடம் சொல்லியும் அவர்களது பேச்சை கேட்காமல் இதுவரை யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு அரிய மரத்தை புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் பயணிக்கிறார்.


அப்போது வழிதவறி ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார். சென்றவர்கள் யாரும் திரும்பி வராத மிக ஆபத்தான அந்த வனப்பகுதியில் வித்தியாசமான சத்தங்களும் எதிர்பாராத சம்பவங்களும் அவரை பயமுறுத்துக்கின்றனர். வெளியேற முயன்றும் மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கே திரும்பி வருவதால், காட்டில் இருந்து வெளியேற வழி தெரியாமல் தடுமாறும் அஷ்ரப், பல ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு உயிருக்கு போராடுகிறார்.



இறுதியில் ஆபத்தான மர்ம நிறைந்த காட்டில் சிக்கிக் கொண்ட அஷ்ரஃப் அங்கிருந்து உயிருடன் திரும்பி வந்தாரா? காட்டிற்குள் மதிகெட்டான் சோலையில் உள்ள தங்க மரத்தை அஷ்ரஃப் புகைப்படம் எடுத்தாரா ? அந்த காட்டில் உள்ள மர்மம் என்ன ? என்பதுதான் ’போட்டோகிராபர்’ படத்தின் மீதிக்கதை.


வீரா கதாபாத்திரத்தில் புகைப்படக் கலைஞராக நடித்துள்ள அஷ்ரஃப், தாய் பாசம், தன் லட்சிய கனவு, தவிப்பு , பயம் ,ஏக்கம் போன்ற பல்வேறு உணர்வுகளை நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி தேர்ந்த நடிகரை போல சிறப்பாக நடித்துள்ளார் .



நாயகியாக நடித்துள்ள ஜனனி சாமிநாதன் கதைகேற்றபடி நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.


நாயகனின் தந்தையாக நடித்துள்ள ஆடுகளம் நரேன், நாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள தேவி மகேஷ், நாயகனின் நண்பராக நடித்துள்ள கருணாகரன், மற்றொரு நண்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உறியடி சிவா படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


இசையமைப்பாளர் ராஜ்குமார் சந்திரசேகரன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .


ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத்தின் ஒளிப்பதிவு, அடர்ந்த காடுகளின் அழகையும் மர்ம உணர்வையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது.


புகைப்பட கலையில் உலக அளவில் சாதனை படைக்க விரும்பும் புகைப்படக் கலைஞர் ஒருவர் ஆபத்தான மர்மமான அடர்ந்த காட்டில் சிக்கி கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பதை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் சுவாரஸ்யமான ஆபத்துகள் நிறைந்த பயணத்தை எடுத்துரைக்கும் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அஷ்ரஃப்


மொத்தத்தில் ’போட்டோகிராபர்’ – மர்மம் நிறைந்த சாகச பயணம்


ரேட்டிங் : 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page