’லெவன்’ - விமர்சனம்
- mediatalks001
- 2 days ago
- 1 min read

வங்கியில் அர்ஜை தலைமையிலான ஒரு கொள்ளை கும்பல் தொடர்ந்து கொலையுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட …. சாமர்த்தியமாக கண்டுபிடித்து அவர்களை என்கவுண்டர் செய்கிறார் நேர்மையான போலீஸ் உயரதிகாரியான நாயகன் நவீன் சந்திரா.
இந்நிலையில் சென்னையில் மர்மமான முறையில் தொடர்ச்சியாக இளம்பெண் முதல் வாலிபர்கள் சிலர் ஒரே முறையில் கொடூரமான உடல் எரிந்த நிலையில் கொலை செய்யப் படுகிறார்கள்.
இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான ஷாஷாங் பல முயற்சிகள் எடுத்தும் கொலைகாரனை நெருக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான ஷாஷாங் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ள, அவர் கோமாவிற்குச் சென்று விடுகிறார்.
இந்நேரத்தில் இக் கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரியான நாயகன் நவீன் சந்திராவிடம் மேலிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நவீன் சந்திராவுக்கு உறுதுணையாக சப் இன்ஸ்பெக்டர் திலீபனும் வருகிறார்.
நவீன் சந்திரா கொலை செய்யப்பட்ட ஒவ்வொருவர் வீட்டில் விசாரணையை மேற்கொள்ளும்போது அனைவரிடமும் கொலையானவர்கள் ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும்போது எடுக்கப்பட்ட குருப் போட்டோவை பார்க்கிறார் .
அந்த போட்டோவின் அடிப் படையில் பள்ளியின் நிர்வாகியான அபிராமியை நவீன் சந்திரா சந்திக்கும்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன.
முடிவில் அபிராமியின் வாக்கு மூலத்தில் நவீன் சந்திரா கொலையாளியை கண்டுபிடித்தாரா ?
கொடூரமான முறையில் இந்த படுகொலைகளை செய்த மர்ம நபர் யார்.? என்ன காரணத்திற்காக இந்த கொலைகளை மர்ம நபர் செய்கிறான் ? என்பதை சொல்லும் படம்தான் ’லெவன்’
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நவீன் சந்திரா கதையுடன் இணைந்து உடல் மொழியில் இறுக்கமான முக பாவனையுடன் வழக்கை அதிரடியாக விசாரிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப் படுதுவதுடன் ஆக்க்ஷன் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் ஷாஷாங், பள்ளியின் தலைமை ஆசிரியையாக நடித்திருக்கும் அபிராமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜை என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டி.இமான் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்
சீரியல் கில்லர் செய்யும் தொடர் கொலைகளை மையமாக வைத்து யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பான திருப்பங்களுடன் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ்.
ரேட்டிங் - 3.5 / 5
Comments