top of page

’பேரன்பும் பெருங்கோபமும்’ - விமர்சனம்

  • mediatalks001
  • Jun 6
  • 1 min read

நாயகன் விஜித் பச்சான் இளைஞராக இருக்கும்போது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் மைம் கோபி , தீபா சங்கர் , அருள் தாஸ் ஆகியோரின் கிராம தலைமையில் கிராம மக்கள் அனைவரும்  ஜாதி வெறி பிடித்த அரக்கர்களாக இருக்கின்றனர் .


அந்த கிராமத்தில் ஜாதி மாறிய காதலோ ,திருமணமோ நடைபெற்றால் கிராம பஞ்சாயத்தில் ஆணவ கொலையாக உயிருடன் தீயிட்டு கொளுத்துகின்றனர் .


சில வருடங்களுக்கு பின் வயதான 50 வயது தோற்றமுடைய நாயகன் விஜித் பச்சான் தேனி மாவட்த்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக வேலை செய்து வருகிறார்.


ஆளுங்கட்சியில் ஆதரவில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் மைம் கோபியின் சொந்த தொகுதியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை ஒன்று காணாமல் போனதாக காவல் துறைக்கு புகார் வருகிறது.


இந்நேரத்தில் காணாமல் போன குழந்தை குறித்து நடக்கும்   போலீசாரின் தீவிர விசாரணையில் அங்கு வேலை செய்யும் விஜித பச்சான் மீது போலீசாருக்கு சந்தேகம் வர,,,,,போலீஸ் அவரை கைது செய்து அவரை பற்றி விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைக்கிறது


முடிவில் நாயகன் விஜித் பச்சான் இளைஞராக இருக்கும்போது அவரது கிராமத்தில் நடந்தது என்ன?


காணாமல் போன குழந்தை கடத்தல் வழக்கில் இருந்து நாயகன் விஜித் பச்சான் விடுவிக்கபட்டாரா ?


ஜாதி வெறியர்களுக்கு எதிராக சாமர்த்தியமாக விஜித் பச்சான் செய்த செயல் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ’பேரன்பும் பெருங்கோபமும்’ .



நாயகனாக நடித்திருக்கும் விஜித் பச்சான் இளைஞர் மற்றும் வயது முதியவர் என்ற இரண்டு வேடங்களில் காதல்,பாசம்,சண்டை என அனைத்திலும் கதையின் நாயகனாக சிறப்பான நடிபபைவெளிப் படுத்தியுள்ளார் .


அழுத்தமான கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஷாலி நிவேகாஸ் பாராட்டும்படியான நடிப்பில் கவனம் பெறுகிறார் .


வில்லன்களாக நடித்திருக்கும் மைம் கோபி, அருள்தாஸ் லோகு, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் ,கீதா கைலாசம், தீபா சங்கர் , காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சாய் வினோத், பவா செல்லதுரை என படத்தில் நடித்த அனைவரும் திரைக் கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர்


இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .

ஜே.பி.தினேஷ்குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம்


ஆணவப்படுகொலையுடன் ஜாதி அரசியலை மையமாக கொண்ட கதையுடன் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் குழந்தை கடத்தலில் ஜாதி வெறியர்களுக்கு ஒரு பாடம் புகட்டும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவபிரகாஷ்.


ரேட்டிங் - 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page