top of page

50 நாட்களில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’


தொடங்கியது ‘கண்ணப்பா’ கவுண்டவுன்! - 50 நாட்களில் உலகம் முழுவதும் வெளியாகிறது


இந்திய திரை ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வரும் நாள் நெருங்கி விட்டது. ஆம், மிகப்பெரிய காவிய திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ இன்னும் 50 நாட்களில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


புகழ்பெற்ற நடிகர்களின் கூட்டணி கொண்ட இந்த பிரம்மாண்டமான படைப்பு, வெள்ளித்திரையில் பக்தி கதை சொல்லலை மறுவரையறை செய்யத் தயாராகும் விதத்தில் இயக்குநர் முகேஷ் குமார் சிங், இயக்கியிருக்கும் இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், பிரபாஸ், டாக்டர் எம். மோகன் பாபு, மோகன்லால், சரத் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் மதுபாலா உள்ளிட்ட இந்திய சினிமாவின் பல பெரிய நட்சத்திரங்களை இப்படத்தின் மூலம் ஒன்றிணைந்துள்ளனர்.


இப்படத்தின் தொலைநோக்குப் பார்வைப் பற்றி கூறிய நடிகர் விஷ்ணு மஞ்சு, “இது வெறும் படம் அல்ல, இது ஒரு அனுபவம், நம்பிக்கை, பக்தி மற்றும் சிவபெருமானிடம் இறுதி சரணடைதல் ஆகியவற்றின் பயணம். பார்வையாளர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு கதையை உருவாக்குவதில் எங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.


அற்புதமான நடிகர்கள், மயக்கும் இசை மற்றும் மிகப்பெரிய கதை சொல்லலுடன், கண்ணப்பா இந்திய சினிமாவில் ஒரு அடையாளமாக மாற உள்ளது. வெளியீட்டிற்கான கவுண்டவுன் தொடங்கும் நேரத்தில், ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.


50 நாட்களில் அதாவது ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தைப் போலவே படத்தின் வெளியீடும் பிரமாண்டமான விளம்பர யுக்திகள் மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் வடிவமைக்கப்பட்டிருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

Comentarios


©2020 by MediaTalks. 

bottom of page