top of page

தீபாவளி பண்டிகைக்கு'டீசல்' படம் வெளியாவதில் மகிழ்ச்சியடைந்த நடிகர் ஹரிஷ் கல்யாண்!

  • mediatalks001
  • 4 hours ago
  • 2 min read

ree

ree

"முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு என்னுடைய 'டீசல்' படம் வெளியாவதில் மகிழ்ச்சி"- நடிகர் ஹரிஷ் கல்யாண்!


வளர்ந்து வரும் வெற்றிகரமான இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 17 அன்று 'டீசல்' படம் வெளியாக இருக்கிறது. துள்ளலான ஹிட் பாடல்கள், கண்ணைக் கவரும் விஷூவல் என படம் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. சமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தஸ்வாவின் புதிய கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.


நிகழ்வில் ஊடகங்களை ஹரிஷ் கல்யாண் சந்தித்து பேசியதாவது, "நல்லதொரு கமர்ஷியல் எண்டர்டெயினர் படமாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ’டீசல்’ அமையும். முதன்முறையாக தீபாவளி பண்டிக்கைக்கு என்னுடைய படம் வெளியாவதால் நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிச்சயம் இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம். ரசிகர்களுடன் சேர்ந்து இந்த தீபாவளிக்கு படம் பார்க்க நானும் ஆவலுடன் உள்ளேன்" என்றார்.


சென்னை தஸ்வா ஸ்டோர் திறப்பு விழா பற்றியும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார், "தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டம் நிறைந்திருக்கும் இந்த வேளையில் சென்னையில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பண்டிகைகள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தஸ்வா கலெக்‌ஷன்ஸ் பண்டிகை காலத்திற்கு நிச்சயம் ஏற்றது. நான் சென்னையில் வளர்ந்ததால், பண்டிகைகள் மற்றும் குடும்ப கொண்டாட்டங்கள் என் மனதுக்கு நெருக்கமானவை. திருமணமோ அல்லது கொண்டாட்டமோ எந்தவொரு பண்டிகை காலங்களிலும் நாம் ஸ்பெஷலாக உணர்வது முக்கியம். ஸ்டைலாகவும் அதே சமயம் நமக்கு பிடித்த வகையிலும் இருப்பதை தஸ்வா உடைகள் உறுதி செய்கிறது. அதுவும் என் சொந்த ஊரிலேயே இது கிடைப்பது இன்னும் ஸ்பெஷல்” என்றார்.


எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 2,500 சதுர அடி பரப்பளவில் புதிதாகத் திறக்கப்பட்ட தஸ்வா கடை, சென்னையின் அடையாளமாக மாற இருக்கிறது. இந்திய பாரம்பரியத்துடன் காலத்தால் அழியாத தொடர்பை உருவாக்க வடிவமைக்கப்பட்ட இந்த கடை பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் இணக்கத்தை பிரதிபலிக்கிறது. நவீன இந்திய ஆண்களுக்கான பிரீமியம் திருமண மற்றும் பண்டிகைக்கால உடை பிராண்டான தஸ்வா, ஆதித்யா பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல் லிமிடெட் (ABFRL) நிறுவனத்தால் பிரபல கூத்தூரியர் தருண் தஹிலியானியுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிராண்டின் பண்டிகை மற்றும் திருமண கலெக்‌ஷனின் சமீபத்திய வரவாக புதிய குர்தா செட்கள் மற்றும் பூந்தி செட்கள், ஆடம்பரமான ஷெர்வானிகள், அச்கான்கள் மற்றும் புதுமையான அங்க்ரகா ஷெர்வானி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஆடம்பரமான, தரமான துணிகள் மற்றும் அசத்தும் எம்பிராய்டரி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பிராண்டின் வளர்ச்சி பற்றிப் பேசிய தஸ்வா பிராண்ட் தலைவர் ஆஷிஷ் முகுல், "பண்டிகை மற்றும் திருமணத்திற்கான தனிப்பட்ட கலெக்‌ஷனாக சென்னையில் எங்கள் புதிய பிராண்டை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் எங்கள் பிராண்ட் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பரமான ஷாப்பிங் பயணத்தை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு விஷயமும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தஸ்வா நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்.


பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் புனேவை தொடர்ந்து, தெற்கு பிராந்தியத்தில் தஸ்வாவின் விரிவாக்கத்தில் சென்னை ஸ்டோர் முக்கிய அங்கம் வகிக்கும்.


ஹரிஷ் கல்யாணின் வசீகரம் மற்றும் தஸ்வாவின் புதிய பண்டிகை கலெக்‌ஷனுடன் சென்னை புதிய கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளது. வரவிருக்கும் தீபாவளி பண்டிகை மற்றும் இந்த பண்டிகைக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டீசல்’ திரைப்படத்தின் வெளியீடு ஆகிய இரண்டும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page