top of page

கவர்னர் மாளிகையில் சி.சத்யா இசையில் பாடல் அரங்கேற்றம் நிகழ்த்தும் 'ஆட்டிசம் சைல்ட்' மானஸி

  • mediatalks001
  • 5 hours ago
  • 1 min read

ree

வள்ளலார் வருவிக்க உற்றநாள்! கவர்னர் மாளிகையில் சி.சத்யா இசையில் பாடல் அரங்கேற்றம் நிகழ்த்தும் 'ஆட்டிசம் சைல்ட்' மானஸி.


சென்னை:


ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் வருவிக்க உற்ற நாளை (அக்டோபர், 5) உலக ஒருமைப்பாட்டு தினமாக உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.


இதனை முன்னிட்டு, அவருடைய 202ஆவது வருவிக்க உற்றநாளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


அதன் ஒரு பகுதியாக, பிரபல இசையமைப்பாளர் சி. சத்யா தலைமையிலான Sound of Sanmarga இசைக்குழுவின் சிறப்பு இசை நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தான் இசையமைத்த வள்ளலார் பாடல்களை இசையமைப்பாளர் சி. சத்யா வழங்க உள்ளார்


இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளார்.


மேலும், இசையமைப்பாளர் சி. சத்யாவின் இசையமைப்பில், ஆட்டிசம் சைல்ட் (Autism Child ) பாடகி மானஸி வள்ளலார் பாடலை மழலை குரலில் பாடி அரங்கேற்றம் செய்கிறார்.


இசை நிகழ்ச்சியில் ஆட்டிசம் சைல்ட் பங்கேற்று பாடுவது கலை உலகில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.


இந்த நிகழ்ச்சியில் மானஸி பாடவுள்ள 'அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே'

என்ற பாடல் அன்றைய தினமே யூடியூப் தளத்தில் வெளியிடப்படவுள்ளன.


இசையமைப்பாளர் சி. சத்யா எங்கேயும் எப்போதும், பொன்மாலைப் பொழுது, தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, காஞ்சனா-2, ஒத்த செருப்பு, அரண்மனை-3, கேங்கர்ஸ் உட்பட ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page