top of page

டாக்டர் ஐசரி கே. கணேஷின் பிறந்தநாள் விழா மற்றும் ’வேல்ஸ் மியூசிக்’ அறிமுக விழா

  • mediatalks001
  • Oct 8
  • 1 min read

ree

ree

ree

டாக்டர் ஐசரி கே. கணேஷின் பிறந்தநாள் விழா மற்றும் ’வேல்ஸ் மியூசிக்’ அறிமுக விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்!


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்திய திரைத்துறை நட்சத்திரங்களுடன் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக சென்னையில் கொண்டாடினார். சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமையாளர்களை ஊக்குவிப்பதற்கு பெயர் பெற்ற டாக்டர் ஐசரி கணேஷ் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க இயலாத ஆளுமையாக வலம் வருகிறார்.


பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மாலை வேளையில் 'வேல்ஸ் மியூசிக்' அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பிரபலமான இசைக்கலைஞர்கள், சுயாதீன கலைஞர்கள் மற்றும் புது திறமையாளர்களுக்கான களத்தை உருவாக்கும் தளமாக ‘வேல்ஸ் மியூசிக்’ செயல்படும். மேலும் இந்தத் தளம் கிரியேஷன், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தையும் கவனிக்கும்.


இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ரவிச்சந்தர், பிரபுதேவா, இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், விஜய், சுந்தர் சி, விஜய் ஆண்டனி, நெல்சன், ஆர்.கே.செல்வமணி, மாரி செல்வராஜ் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, லலித், நடிகர்கள் அருண் விஜய், கீர்த்தி ஷெட்டி, மீனா, பார்த்திபன், ஆர்.வி.உதயகுமார், தமிழ்குமரன், கே.பாக்யராஜ், வசந்த் ரவி, ரெஜினா கேசண்ட்ரா, ஆதித்யராம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வு வெறுமனே பிறந்தநாள் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் நட்பு, படைப்பு, கொண்டாட்டம் என இந்திய இசையின் புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைத்துள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page