Cast: Natty, Shilpa Manjunath, Motta Rajendran, Murali, Ananya Mani, Shaasvi Bala, Subhapriya Malar and others
Directed by Haroon
Produced by V. M. Munivelan
Cinematography - Christopher Joseph
Music - Karthick Raja
Editor - Sudharsan R
PRO - Ksk Selva
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூன்று பேரும் பெற்றோரை மதிக்காமல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இரவு நேரங்களில் கிளப்பில் வீக் என்ட் பார்ட்டியில் மது மயக்கத்தில் ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களுடன் வேலை செய்யும் புதிதாக திருமணம் ஆன அனன்யா மணியை பார்ட்டிக்கு அழைத்து சென்று மது பழக்கத்திற்கு ஆளாக்கி கும்மாளம் போடுகிறார்கள்.
இரவு பார்ட்டி முடிந்து மதுமயக்கத்தில் அனைவரும் காரில் செல்லும் போது நட்டி நான்கு பேரையும் கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார்.
கடத்திய நான்கு பெண்களையும் சைக்கோ வில்லனாக கைகளை கட்டி போட்டு சித்ரவதை செய்கிறார் .
முடிவில் பயத்தில் அலறும் அந்த பெண்கள் நட்டியின் பிடியில் இருந்து தப்பித்தார்களா?, இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘வெப்’
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி பெண்களை கொடுமைப்படுத்தும் சைக்கோ வில்லனாக மிரட்டலான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் . இறுதியில் கதையின் திருப்புமுனையாக இவரது கதாபாத்திரம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.
நாயகிகளாக இளசுகளை ஏங்க வைக்கும் ஷில்பா மஞ்சுநாத் , சாஷ்வி பாலா, சுபபிரியா மலர், அனன்யா மணி உள்பட 4 பெண்களும் ‘நட்டி’யின் கொடுமைகளை அனுபவித்து பயந்து அலறும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
நான் கடவுள் ராஜேந்திரன், முரளி சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவும்,, கார்த்திக் ராஜாவின் இசையும் படத்திற்கு பக்க பலம் !
நாகரீக வளர்ச்சியில் இன்றைய இளையதலைமுறை போதைக்கு அடிமையாகி கெட்டு சீரழிவதை கதையாக கொண்டு ஒரே இடத்தில் நடக்கும் காட்சிகளால் சில இடங்களில் தொய்வு இருந்தாலும் எதிர்பாராத கிளைமாஸ்க்குடன் பல வித போதைகளுக்கு அடிமையாகும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூன்.
ரேட்டிங் ; 2.5 / 5
Comments