சென்னையில் உள்ள பிரபல பத்திரிகையான 'வானம்' பத்திரிக்கை இதழில் திறமையான புலனாய்வு நிருபராக வேலை செய்கிறார் விஜய் ஆண்டனி.
பத்திரிக்கை சம்பந்தப்பட்ட வேலைக்காக வெளியூர் செல்லும் போது கர்ப்பிணியான அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.
பிரசவத்தின் போது குழந்தை பிறந்ததும் விஜய் ஆண்டனி மனைவி இறந்துவிட மனதளவில் பாதிக்கப்படும் விஜய் ஆண்டனி,,, பின்னாளில் சிறுமியான தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நேரத்தில் பத்திரிகை நிறுவனர் நிழல்கள் ரவியின் மகன் பத்திரிகை அலுவலகத்திலேயே ஒரு நடிகரின் மேல் பாசம் கொண்ட ஒருவனால் கொடூரமாக கொல்லப்படுகிறார்.
இந்நிலையில் நிழல் ரவியின் அழைப்பின் பேரில் மீண்டும் புலனாய்வு நிருபராக பணியில் சேருகிறார் விஜய் ஆண்டனி.
நிழல்கள் ரவியின் மகன் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் அவரது கொலையில் விஜய் ஆண்டனிக்கு சந்தேகம் ஏற்பட,,, அந்தக் கொலையில் நிகழ்ந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க விசாரணையில் ஈடுபடும்போது நிழல்கள் ரவியின் மகன் மட்டுமல்ல மேலும் சிலர் இதே முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடிக்கிறார்.
இந்த கொலைகளுக்கு பின்னால் மிகப்பெரிய நெட்வொர்க் இயங்குவதை புலனாய்வு திறமையில் கண்டுபிடிக்கும் விஜய் ஆண்டனி,,, முடிவில் நடந்த கொலைகளின் பின்னணியில் இருந்தவர்கள் யார் ? அவர்களை விஜய் ஆண்டனி கண்டுபிடித்தாரா ? இல்லையா? என்பதைச் சொல்லும் படம் தான் 'ரத்தம்'
நாயகனாக விஜய் ஆண்டனி அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் வழக்கமான பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் ரம்யா நம்பீசன்.
வில்லத்தனமான நடிப்பில் நடிக்கும் அமைதியான அழகில் மஹிமா நம்பியார்.
மிடுக்கான தோற்றத்தில் பத்திரிக்கை நிருபராக வரும் நந்திதா ஸ்வேதா,
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், ஓ ஏ கே சுந்தர், கலைராணி, மீஷா கோசல் என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் கண்ணன் நாராயணனின் இசையும், படத்தொகுப்பாளர் டி எஸ் சுரேஷின் படத்தொகுப்பும், செந்தில் ராகவனின் சிறப்பான கலைப்பணியும் படத்திற்கு பக்கபலம்.
இது வரை யாரும் திரையில் பார்க்காத புதுமையான கிரைம் த்ரில்லர் கதையை புதிய பாணியில் சீட்டின் நுனியில் அமர வைக்கும் விறு விறுப்பான திரைக்கதையுடன்,, யாருமே யூகிக்க முடியாத நடைபெறும் கொலைகளுக்கு பின்னணியில் இருப்பவர் யார் என தெரியும்போது ,,, படம் பார்க்கும் ரசிகர்களே அதிரும்படியான காட்சிகளுடன் சஸ்பென்ஸ் கலந்த கிரைம் த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சி எஸ் அமுதன் .
ரேட்டிங் ; 3. 5 / 5
Comments