top of page

‘80ஸ் பில்டப்’ விமர்சனம்

mediatalks001

1980ம் ஆண்டு காலகட்டத்தில் வாழும் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த சந்தானம் வெறித்தனமான தீவிர கமல் ரசிகர்.

சந்தானத்தின் தாத்தா ஆர்.சுந்தர்ராஜன் தீவிர ரஜினி ரசிகர்.

இவர்கள் வீட்டில் உள்ள கத்திக்குள் புதையல் ஒன்றின் வரைபடம் இருப்பதை மன்சூர் அலிகான் தெரிந்து கொள்ள , வீட்டின் வெளியே நின்று கொண்டு அந்த கத்தியை கைப்பற்ற மனோபாலாவையும் , மொட்டை ராஜேந்திரனையும் ஆர்.சுந்தர்ராஜனின் வீட்டின் உள்ளே அனுப்புகிறார் .

ஆர்.சுந்தர்ராஜனிடம் பழைய கத்தியை கொடுத்தால் நாங்கள் வைரக்கற்களை தருகிறோம் என இருவரும் சொல்ல,, கற்கண்டு என நினைத்து அவர்களிடம் இருக்கும் வைரக்கற்களை விழுங்கிவிடும் ஆர். சுந்தர்ராஜன், திடீரென இறந்துவிடுகிறார்.

பிணமான ஆர்.சுந்தர்ராஜனின் வயிற்றில் இருந்து வைரத்தை எடுப்பதற்காக பிணவறையில் வேலை செய்யும் பெண் வேடம் போட்ட ஆனந்தராஜுடன் மன்சூர் அலிகான் குழுவினர் ஆர். சுந்தர்ராஜன் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.

இந்நேரத்தில் தாத்தாவின் இறப்பிற்கு வரும் முறை பெண்ணான நாயகி ராதிகா ப்ரீத்தியை பார்த்ததும் அவரது அழகில் மயங்கி காதலில் விழும் சந்தானம், ஒரு நாளுக்குள் அவளை தன்னிடம் காதலை சொல்ல வைக்கிறேன் என தன் தங்கையிடமும் அவரது தோழிகளிடமும் சவால் விடும்போது,,,,

நீ தோற்றால் தாவணி கட்டிக்கொள்ள வேண்டும் என சந்தானத்தின் தங்கை சொல்ல ,, நான் ஜெயித்தால் நீங்கள் மொட்டை அடித்து கொள்ளவேண்டும் தங்கையிடமும் அவரது தோழிகளிடமும் சவால் விடுகிறார் சந்தானம் .

முடிவில் சந்தானம் ராதிகா ப்ரீத்தியை காதலில் விழ வைத்து சவாலில் ஜெயித்தாரா?

இறந்து பிணமான தாத்தா ஆர்.சுந்தர்ராஜனின் வயிற்றில் இருக்கும் வைரத்தை மன்சூர் அலிகானின் குழு எடுத்தார்களா? இல்லையா?

என்பதை காமெடி தர்பாராக சொல்லும் படம்தான் ‘80ஸ் பில்டப்’

கதையின் நாயகனாக சந்தானம் படம் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து துக்க வீட்டில் நடக்கும் காமெடி ரகளையுடன் காதல், ஆக்‌ஷன், செண்டிமென்ட் என அனைத்தும் ரசிகர்கள் ரசிக்குமளவில் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகி ராதிகா ப்ரீத்தி அழகான நடிப்பில் ரசிக்க வைக்கிறார் .

ஆடுகளம் நரேனும் ஆனந்தராஜும் சேர்ந்து நடத்தும் காமெடி கலாட்டாவுடன் ,சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில் சாமி ,தங்கதுரை ,முனீஷ்காந்த் ,ரெடின் கிங்லி ,சுவாமிநாதன் ,கூல் சுரேஷ் ,அஸ்வின் ,வினோத் சாகர் ,சேஷு என நட்சத்திர பட்டாள நடிகர்கள் சிறப்பான நடிப்பில் நடித்துள்ளனர் .


ஜிப்ரானின் இசையும் ,ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


படம் பார்க்கும் ரசிகர்கள் வயிறு வலிக்க சிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ,, கதையில் லாஜிக் பார்க்காமல் நடிப்பின் ஆளுமையான சந்தானத்தின் குழுவுடன் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண் .

ரேட்டிங் ; 3.5 / 5


Comments


bottom of page