top of page

'அவள் பெயர் ரஜ்னி' - பட விமர்சனம்


காளிதாஸ் ஜெயராமின் திருமண நிச்சயத்தில் கலந்து கொள்ள காளிதாஸ் ஜெயராமின்அக்கா நமீதா பிரமோத்வும் அக்காவின் கணவர் சாய்ஜு குரூப்பும் இரவு நேரத்தில் காரில் வருகிறார்கள். பெட்ரோல் இல்லாத காரணத்தால் நடுவழியில் கார் நின்றுவிடுகிறது.

நமீதா பிரமோத்தை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு பெட்ரோல் வாங்க செல்கிறார் சாய்ஜுகுரூப்.

சில மணி நேரத்துக்கு பின் காரின் மேல் பகுதியில் தலைவிரி கோலத்தில் உள்ள ஒரு பெண் சாய்ஜுகுரூப்பை வெறித்தனமாக கொலை செய்கிறார்.

இதை பார்க்கும் நமீதா பிரமோத் அதிர்ச்சியில் மயங்கி விழ தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

மறுபக்கம் இன்ஸ்பெக்டர் அஸ்வின்குமார் வழக்கை விசாரித்து கொலையாளியை தேடும் நேரத்தில்,,,,,

கொலை செய்த அந்த பெண் யார் என்பதை கண்டறிய காளிதாஸ் ஜெயராம் முயற்சி செய்கிறார்.

ஒரு கட்டத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தி சிகிச்சைக்கு பின் வீட்டில் இருக்கும் நமீதா பிரமோத்தை கடத்தி செல்கிறார் அந்த பெண் .

முடிவில் எதற்காக சாய்ஜுகுரூப்பை அந்த பெண் கொலை செய்தார் ?

நமீதா பிரமோத்தை கடத்தி சென்று அவரையும் அந்த பெண் கொல்வதற்கான காரணம் என்ன ?

இறுதியில் கொலையாளியான அந்த பெண்ணை காளிதாஸ் ஜெயராம் கண்டுபிடித்தாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'அவள் பெயர் ரஜ்னி'

கதையின் நாயகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பில் தன் அக்கா நமீதா ப்ரமோத்தின் நிலையை நினைத்து கலங்கும்போதும்.... கொலையின் பின்னணியை தேடிக் கண்டு பிடிக்கும் காட்சிகளிலும் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடிக்கும் ரேபா மோனிகா ஜான் ,,, காளிதாஸ் ஜெயராமின் அக்காவாக வரும் நமீதா பிரமோத்,ஆட்டோ டிரைவராக நடிக்கும் கருணாகரன் ,இன்ஸ்பெக்டராக நடிக்கும் அஸ்வின்குமார், ரமேஷ் கண்ணா ,பூ ராமு , கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா சாய் என நடித்த நடிகர்கள் அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .


4 மியூசிக்ஸ் பின்னணி இசையும் ,ஆர் ஆர் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


இரவு நேரத்தில் காரில் மேல் ஒரு மர்ம பெண் செய்யும் கொலை அதன் பின் நடக்கும் மர்ம சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதையில் திகிலான திரைக்கதை அமைப்புடன் அனைவரும் ரசிக்கக்கூடிய கிரைம் திரில்லர் கலந்த படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ்.


ரேட்டிங் ; 3.5 / 5


bottom of page