top of page

'அயலான் ' விமர்சனம் ஜனரஞ்சகமான அனைவரும் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் 'அயலான் '




பூம்பாறை கிராமத்தில் தன் அம்மா பானுப்ரியாவுடன் இயற்கை விவசாயம் செய்து எதற்கும் தீங்கு நினைக்காத நல்ல மனிதனாக வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக வந்து இவரது வயல் காட்டை முழுவதுமாக நாசமாக்கிவிடுகிறது.

இதனால் ஏற்படும் பொருளாதார சிக்கலில் வேலைக்காக சென்னை வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நேரத்தில் விண்ணில் இருந்து விழும் எரிக்கல்லின் சிறு துண்டு பூமியில் விழுகிறது.

அந்த கல்லை வைத்து நடத்தப்படும் ஆராய்ச்சியில் மிகவும் சக்தி வாய்ந்த கல் என வில்லன் சரத் கேல்கருக்கு தெரிய வருகிறது.

அந்த கல் மூலமாக பூமியை யாரும் தோண்டாத ஆழத்தில் துளை போட்டு பூமிக்கு அடியில் உள்ள விஷ வாயுவான நோவா வாயுவை எடுத்து அதை ஆயுதமாக தயாரிக்கும் முயற்சியில் வில்லன் சரத் கேல்கர் ஈடுபடுகிறார்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஒட்டு மொத்த பூமியே அழிந்துவிடும் என்பதை அறிந்துக்கொள்ளும் வேற்றுகிரகவாசியான ஏலியன் பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற முடிவு செய்கிறார்.

அதற்காக வில்லனிடம் இருக்கும் அந்த எரிக்கல்லை கைப்பற்ற ஸ்பேஷிப் மூலம் பூமிக்கு வருகிறார்.

ஒரு கட்டத்தில் சென்னையில் அமைந்துள்ள ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் எரிக்கல்லை எடுக்க வரும் ஏலியன் சிவகார்த்திகேயனுடன் நண்பர்களான யோகிபாபு , கோதண்டம் மற்றும் கருணாகரனுடன் நட்பாவதோடு ,,வில்லனிடமிருந்து பூமியை காப்பாற்றும் முயற்சியில் சிவகார்த்திகேயனையும் உடன் சேர்த்துகொள்ள, சிவகார்த்திகேயனும் ஏலியனும் இணைந்து விஷ வாயுவை எடுத்து ஆயுதமாக தயாரிக்கும் வில்லனின் முயற்சியை முறியடித்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'அயலான் '


கதையின் நாயகனாக சிவகார்த்திகேயன் காதல் நாயகனாகவும் ,,,அதிரடி ஆக்‌ஷனில் ஏலியனுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

ராகுல் ப்ரீத் சிங் கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .

யோகி பாபு, கருணாகரன், கோதண்டம் ,பால சரவணன் என இவர்களது அதகள காமெடியுடன் ,,,வேற்றுகிரகவாசி ஏலியனாக நடிக்கும் வெங்கட் செங்குட்டுவன்,,வில்லனாக மிரட்டும் சரத் கேல்கர் அவருடன் வரும் 2000ம் ஆண்டுகளின் கனவுக்கன்னி அழகான வில்லி இஷா கோபிகர்,முனிஷ்காந்த், செம்மலர் அன்னம், பானுப்ரியா என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடன் பின்னணி இசை ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது .

நிரவ்ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .

பூமியில் வாழும் புழு பூச்சி முதல் விலங்கின உயிரினங்கள் வரை மனித இனங்களை போல அவைகளுக்கும் இந்த பூமி பொதுவானது என்ற கருத்தினை அழுத்தமாக சொல்வதுடன் விஞ்ஞான தொடர்புடைய கதையுடன்

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தரத்துடன் வடிவமைக்கப்பட்ட ஏலியனுடன்,, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கும் தொழில்நுட்ப ரீதியாக தரமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடும் பொழுதுபோக்கு படமாக படத்தை இயக்கியுள்ளார் ஆர் ரவிக்குமார் .


ரேட்டிங் ; 3.5 / 5


ஜனரஞ்சகமான அனைவரும் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் 'அயலான் '


Comentarios


bottom of page