குடி போதைக்கு அடிமையான அங்கையற்கண்ணன் சொந்தமான காரை வைத்து கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார் .
இந்நிலையில் அங்கையற்கண்ணனும், அவரது மாமா குட்டி புலி ஷரவண சக்தியும் தினமும் குடித்தே போதையில் தள்ளாடுகின்றனர்
குட்டி புலி ஷரவணசக்தி தன் ஆசை மனைவி தரும் பணத்தில் தினமும் குடித்து சந்தோசமாக வாழ்கிறார்.
குடிக்கு அடிமையான இருவரும் செய்யும் பிரச்சனைகளால் இவர்களது குடும்பத்துக்கு மட்டும் இல்லாமல் மற்றவர்களின் குடும்பத்துக்கும் ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாள் முழுவதும் மது போதையில் இருக்கும் இவர்களால் மயில் சாமி ஒரு விபத்தில் இறக்கிறார் .
மயில் சாமி இறப்பினால் அங்கையற்கண்ணன் போலீஸ் காவலில்
சிறைக்கு போக ,, சில மாதங்களுக்கு பின் நிறை மாத கர்ப்பிணியான தன் மனைவியை பார்க்க பரோலில் சிறையிலிருந்து வெளியில் வருகிறார் குடி போதையினால் வாழ்க்கையே சீரழிந்த நிலையில் இருக்கும் அங்கையற்கண்ணனை பிரிந்து அவ்ரது மனைவி தாய் வீட்டுக்கு செல்கிறார் . மறுபுறம் வாழ வழியில்லாமல் பணத்திற்காக மயில்சாமியின் மகள் அபி நக்ஷத்ரா தடம் மாறி வேறு பாதைக்கு செல்கிறார் ?
முடிவில் அங்கையற்கண்ணன் மீண்டும் மனைவியுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ்ந்தாரா ?
தினமும் போதையில் தள்ளாடிய அங்கையற்கண்ணனும், குட்டி புலி ஷரவண சக்தியும் குடி பழக்கம் இல்லாமல் திருந்தி வாழ்ந்தார்களா ? என்பதை சொல்லும் படம்தான் ‘கிளாஸ்மேட்ஸ்’
அறிமுக நாயகனாக நடிக்கும் அங்கையற்கண்ணன் காதல் காட்சிகளிலும் ,, குடி போதையில் ஷரவண சக்தியுடன் இணைந்து செய்யும் அலப்பறையான காட்சிகளிலும் தேர்ந்த நடிகராக இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகனின் மாமாவாக நடிக்கும் ஷரவணசக்தி வழக்கம் போல நம்மை சிரிக்க வைக்கிறார்.
நாயகியாக நடிக்கும் பிரனா கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .
மயில்சாமி ,டி.எம்.கார்த்திக்,சாம்ஸ், மயில்சாமியின் மகளாக நடிக்கும் அபி நக்ஷத்ரா என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
பிரித்வி இசையில், சீர்காழி சிற்பி வரிகளில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது .
அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம்.
ஒருவன் போதையான மது பழக்கத்துக்கு அடிமையானால் அவனை சீரழித்துக் கொள்வதோடு அவனது குடும்பத்துடன் அவனை சார்ந்திருப்பவர்களையும் குடியினால் எப்படி சீரழிக்கிறான் என்பதை நகைச்சுவையான திரைக்கதை அமைப்புடன் முடிவில் மயில் சாமி மகளான அபி நக்ஷத்ரா எடுக்கும் முடிவை குடி போதை அடிமைகளுக்கு சாட்டை அடி கொடுப்பதோடு போதைக்கு அடிமையான குடி மகன்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஷரவணசக்தி
ரேட்டிங் 3 / 5
Kommentare