top of page

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' - விமர்சனம் !






பள்ளி பருவ காலத்தில் இருந்து ஆனந்தம் காலனியில் கதாநாயகனான ஆனந்த் வசித்து வருகிறார். அந்த காலனியில் வசிக்கும் மற்ற சிறுவர்கள் அனைவரும் நண்பர்களாக ஒரே கேங்காக இருக்கின்றனர்.


பள்ளி படிப்பை முடித்த பின் ஆனந்த்க்கு திரைத்துறையில் ஒரு நடிகனாக வேண்டும் என்பதே கனவு ஆனால் பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்கிறார்.


வளர்ந்த பின் ஒரே கேங்காக இருந்த நண்பர்கள் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து பின் பல்வேறு இடங்களில் வேலைகளுக்கு செல்கின்றனர்.


பின் ஒரு கட்டத்தில் ஆனந்த் சொந்தமாக நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தொழிலை செய்ய NOVP ஈவண்ட் மேனேஜ்மண்ட் கம்பெனியை தொடங்குகிறார்.


இதற்கிடையில் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் பவானி ஸ்ரீயை காதலிக்கிறார் .


இந்நிலையில் மற்ற ஈவண்ட் மேனேஜ்மண்ட் கம்பெனியை விட அவர்களது கம்பெனி வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக Become a Star என்ற ஆப் மூலம் மக்கள் விரும்பும்படி வித்தியாசமான ஒரு ட்ரெண்டுடன் மேனேஜ்மண்ட் கம்பெனியை நடத்துகிறார் .


அதன் பிறகு இவர்கள் நினைத்தது போல அமையாமல் இவர்களது தொழிலில் தொய்வு ஏற்பட நண்பர்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.


ஆனந்த் வீட்டிலும் கடன் தொல்லையால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட பெற்றோரின் விருப்பப்படி சிங்கப்பூர் செல்கிறார் .


சிங்கப்பூரில் மீண்டும் NOVP ஈவண்ட் மேனேஜ்மண்ட்டை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதிக்க வேண்டும், என்ற முயற்சியில் ஈடுபடுகிறார்.


முடிவில் அவரது முயற்சி வெற்றி பெற்றதா? அவர் மீண்டும் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றி பெற முடிந்ததா ? என்பதை சொல்லும் படம்தான் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'



நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த்,அப்பாவாக வரும் குமரவேல் ,லீலா , விசாலினி , அவரது காதலியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, ஆனந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ் ஆகியோர் இயல்பாக நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .


இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் சில காட்சிகளில் நடித்துள்ளனர் .


இசையமைப்பாளர் .காஷீப் இசையும் , ஒளிப்பதிவாளர் தமிழ் செல்வன் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் !


படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் கதை எழுதி இயக்கியிருக்கிறார்.


நண்பர்களையும், நட்பையும் மையமாக கொண்ட கதையுடன் காதலுடன் சேர்ந்து , பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் புரிதலை அழுத்தமாக சொல்வதுடன் சுவாரஸ்யமாக இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஆனந்த்


ரேட்டிங் - 3 / 5

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
bottom of page