top of page

புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகம் செய்த ZEE5

  • mediatalks001
  • 4 days ago
  • 2 min read

ZEE5 புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகம் செய்து, மொழியை மையமாகக் கொண்ட, பர்ஸ்னலைஸ்ட் ஓடிடி தளமாக மாறுகிறது !!


நம்ம மொழி, நம்ம கதைகள் புத்தம் புதிய நவீன மாற்றங்களுடன் உங்கள் ZEE5 !!


புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !!


~ இந்தியாவின் நவீன தன்மையும், அதன் பன்மொழித் தன்மையையும் பிரதிபலிக்கும் புதிய பிராண்ட் லோகோ! ~


~ “பல மொழிகள், முடிவற்றக் கதைகள்” என்ற பிராண்ட் பிரச்சாரம் – உணர்ச்சி பிணைப்பையும், மொழிப் பெருமையையும் கொண்டாடும் புதிய முயற்சி ~


~ 7 மொழிகளில் UHD மற்றும் Dolby Atmos உடன் தொடங்கும், மொழியை மையப்படுத்திய சப்ஸ்கிரிப்ஷன் பிளான்கள் ₹120 முதல் துவங்குகிறது ~


~ 2025-26 நிதியாண்டில், 130க்கும் மேற்பட்ட புதிய சீரிஸாகவும், திரைப்படங்கள், நான்பிக்சன் மற்றும் லைவ் நிகழ்ச்சிகள் பல மொழிகளில் ~


இந்தியா, 7 ஜூன் 2025 – ZEE5 இன்று தனது புதிய பிராண்டு அடையாளத்தையும், எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான மாற்றத்தையும் அறிவித்து, இந்தியாவின் முன்னணி உள்ளூர் OTT தளமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. “நம்ம மொழி நம்ம கதைகள்” எனும் வாக்குறுதியுடன், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நெடுங்கதைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், ZEE5 புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.


இந்த புதிய மாற்றத்தில், மொழியை மையப்படுத்திய பல புதிய திட்டங்கள், AI சார்ந்த பர்ஸ்னலைஸ்ட் பரிந்துரைகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட கஸ்டமர் அனுபவம் ஆகியவை அடிப்படை அம்சமாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மொழிக்குமான கண்டண்ட் பிளான்கள் தனித்தனியாக உருவாக்கப்படுகின்றது.


மொழி அடிப்படையிலான சந்தா திட்டங்கள் ₹120/மாதம் முதல் தொடங்க, இந்தி (பஞ்சாபி மற்றும் போஜ்புரி உட்பட) ₹220/மாதம், All Access Pack ₹320/மாதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் வருடாந்திர சலுகை கட்டணமும் உள்ளது.


ZEE நிறுவனத்தில் வரவிருக்கும் முக்கிய மொழி சார்ந்த சீரிஸ்கள் :


Detective Sherdil (இந்தி)


Chhal Kapat: The Deception (இந்தி)


சட்டமும் நீதியும் (தமிழ்)


Mothubaru Love Story (தெலுங்கு)


Inspection Bungalow (மலையாளம்)


Maarigallu (கன்னடம்)


Aata Thambhahya Naay (மராத்தி)


Vibhishan (பெங்காலி) ஆகிய படைப்புகள் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.


ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவர் அமித் கோயங்கா கூறியதாவது...

"இந்திய பார்வையாளர்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஆழமான பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட, மொழிக்கு முதன்மையான தளமாக மாறுவதற்கான எங்கள் பயணத்தில் எங்கள் புதிய பிராண்ட் அடையாளம் ஒரு முக்கிய படியாக இருக்கும். ZEE இந்த புதிய பிராண்ட், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில், எங்கள் தடத்தை வலுப்படுத்துதல், கலாச்சார ரீதியாக பொருத்தமான கதைசொல்லல் மூலம் ரசிகர்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்துதல் மற்றும் பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட மற்றும் உள்ளுணர்வு கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த, வசதியான தளத்தைத் தொடர்ந்து உருவாக்குதல் என செயல்படும். இது உலகளவில் இந்தியப் பொழுதுபோக்கு படைப்புகளைக் கண்டறிந்து, இணைத்து, நுகரும் விதத்தில் ஒரு புதிய கலாச்சார மாற்றமாகும்"


ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கார்த்திக் மகாதேவ் கூறுகையில்..,

"நம்ம மொழி நம்ம கதைகள்" என்ற வாசகத்துடன் கூடிய எங்கள் பிராண்ட் பிரச்சாரம், மொழி அடிப்படையிலானது, ஒரு ஆழமான பர்ஸனலைஸ் உணர்வுகளின் கொண்டாட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் மொழியில் சொல்லப்படும் ஒரு கதை, அதை வெறும் கதையாக பார்க்காமல், அதை வாழ்ந்தது போல உணர வைப்பது தான் எங்கள் நோக்கம். 7 மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இந்த பன்மொழி பிரச்சாரம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் உட்பட பெரிய மற்றும் சிறிய நகரங்களின் கலாச்சாரத்துடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மொழி அடிப்படையிலான இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதும், அவர்கள் மொழியில் அவர்கள் கலாச்சாரத்தில் படைப்புகளை வழங்க வேண்டும் என்ற ZEE5 இன் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறது.


ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை உள்ளடக்க அதிகாரி ராகவேந்திரா ஹுன்சூர் கூறுகையில்..,

“ZEE5 இல், சக்திவாய்ந்த கதைசொல்லல் ஆழமான கலாச்சார நுண்ணறிவுடன் தொடங்குகிறது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மொழி சார்ந்த பார்வையாளர்களுக்குச் சேவை செய்வதில், நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அவர்களின் யதார்த்தங்கள், அவர்களின் மொழிகள் மற்றும் அவர்களின் அன்றாட கதைகளில் இணைந்து, நாங்கள் எதை உருவாக்குகிறோம் என்பதை மட்டுமல்ல - யாருக்காக உருவாக்குகிறோம் என்பதையும் இதில் விரிவுபடுத்தியுள்ளோம். அது நீண்ட வடிவ ஒரிஜினல் கதைகள், குறுகிய வடிவ கதைகள் அல்லது சோதனை வடிவங்கள் என எதுவாக இருந்தாலும், பார்வையாளர்களை அவர்களின் மொழிகளில் மகிழ்விப்பதே எங்கள் குறிக்கோள். இது வெறும் புதுமையான கண்டண்ட் உள்ளடக்க உத்தி மட்டும் அல்ல - பார்வையாளர்கள் முழுமையாக ரசிக்கும் வகையில் மொழியை மையப்படுத்தி, எங்கள் புதிய படைப்புகளை வழங்கவுள்ளோம்"



இந்த புதிய பிராண்டிங் மாற்றம், ‘Yours Truly, Z’ எனும் Zee நிறுவன வாக்குறுதியுடன் மிக இயல்பாக ஒத்துப்போகிறது. இது ZEE5-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்காக, பல்வேறு மொழிகளில் புதுமையான கண்டண்ட்களை வழங்கும் ஒரே தளமாக ZEE5 தன்னை நிலைநிறுத்தி வருகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page