top of page

கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ள ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா'

mediatalks001

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம் டிசம்பர் 25,2025- கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது!


யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதன் அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம் 'ஆல்ஃபா'. இது ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் பெண்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் 'ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ்' திரைப்படம் ஆகும்.இத்திரைப்படம், டிசம்பர் 25,2025 அன்று திரையரங்குகளில் வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.



பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான 'ஆலியா பட்'  இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில்,  பாலிவுட் திரைத்துறையின் வளர்ந்து வரும் நட்சத்திரம் மற்றும் ஒய். ஆர். எஃப் நிறுவனம் கண்டெடுத்த திறமை வாய்ந்த கதாநாயகியான ஷர்வரியுடன் இணைந்து  நடிக்கிறார். ஷிவ் ராவைல் இயக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்பைவர்ஸ் படத்தில் அவர்கள் இருவரும் சூப்பர் ஏஜென்ட்களாக நடிக்கிறார்கள்.



இந்த படம் ஒரு பெரிய திரை வெளியீடாக அமைய ஆதித்யா சோப்ரா முடிவெடுத்துள்ளதால் பார்வையாளர்களுக்கு சரியான விடுமுறை விருந்தாக 'ஆல்பா' தயாராக உள்ளது.இத்திரைப்படம் அதிர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் சிலிர்ப்பை உண்டாக்கும் காட்சிகளுடன், அதிரடியான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை ஒன்றிணைத்து வெளியாக உள்ளது.


Comments


©2020 by MediaTalks. 

bottom of page