’தி பெட்’ (The Bed) - விமர்சனம்
- mediatalks001
- 4 days ago
- 1 min read

சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகன் ஸ்ரீகாந்த் தனது நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர் வார விடுமுறை நாளில் ஊட்டிக்கு செல்ல முடிவு எடுக்கிறார்கள். அதற்காக இவர்களுடன் விலை மாதுவான நாயகி சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கிறார்கள்.
நாயகி சிருஷ்டி டாங்கே மீது நாயகன் ஸ்ரீகாந்த் காதல் கொள்ள இவரது காதலை சிருஷ்டி டாங்கே ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது நண்பர்கள் சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க ஆசைப்படுகிறார்கள்.
இந்நிலையில் சிருஷ்டி டாங்கேவும், ஸ்ரீகாந்த்துடன் வந்த நண்பன் விக்ரமும் திடீரென்று காணாமல் போய்விடுகிறார்கள்.
ஊட்டியில் உள்ள காவல்துறையினர் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க முற்படுகின்றனர். இதில் உண்மை வெளிவந்ததா? காணாமல் போன இருவரும் கிடைத்தார்களா? என்பது தான் "தி பெட்" படத்தின் மீதி கதை.
ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக நடித்திருக்கும் நாயகன் ஸ்ரீகாந்த் இயல்பான நடிப்பால் சிருஷ்டி டாங்கே காதல் கொண்டு அவரைப் பாதுகாக்கத் துடிக்கும் காட்சிகளில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார்.தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அனைவரையும் கவர்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நாயகி சிருஷ்டி டாங்கே, அழகோடு கொஞ்சம் கவர்ச்சியியிலும் தாராளம் காட்டி வாலிப ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய், போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தேவி பிரியா, நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யா, ஆகியோர் நடிப்பு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் பாடல் கேட்கும் ரகம் , பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.
கே. கோகுல் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
பயணியர் தங்கும் விடுதியில் இருக்கும் ஒரு படுக்கையின் பார்வையில் விலை மாதுவான நாயகியை மையப்படுத்திய கதையுடன் சஸ்பென்ஸ் திரில்லர் என இரண்டு ஜானர்களை அளவாக கையாண்டு இரண்டு மணி நேரம் படம் செல்வதே தெரியாமல் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ். மணிபாரதி
ரேட்டிங்- 3 / 5








Comments