’ஆழி’ - விமர்சனம்
- mediatalks001
- 1 day ago
- 2 min read

888 புரொடக்க்ஷன் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில் மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் ’ஆழி ’
சரத்குமார் ,இந்திரஜித் ஜெகஜித்,தேவிகா சதீஷ், வையாபுரி ,ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா ஆகியோர் நடித்துள்ளனர் .
நாகர்கோவிலில் வாழும் சரத்குமார் மீன்பிடி மெக்கானிக்காக வேலை செய்து கொண்டே போதைப்பொருள் விற்பனை, ஆயுதம் கடத்தல் போன்ற பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.வசதி படைத்த பணக்காரரான அவருடைய ஒரே மகளான தேவிகா சதீஷ் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவரான இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். இந்திரஜிதும் தேவிகாவை மனதார காதலிக்கிறார்.
தன் மகள் ஏழை மாணவரான இந்திரஜித் ஜெகஜித்தை காதலிப்பது தெரிந்ததும் கோபமடையும் சரத்குமார் இந்திரஜித் ஜெகஜித்தை ஆழ்கடலுக்குள் கடத்திச் செல்கிறார்.
ஆழ்கடலில் படகில் வைத்து இந்திரஜித்தை கொலை செய்ய நினைக்கும் சரத்குமாரின் கால் எதிர்பாராத விதமாக படகில் இருக்கும் மோட்டாரில் மாட்டிக்கொள்கிறது.
இறுதியில் ஆபத்தில் இருக்கும் சரத்குமாரை இந்திரஜித் ஜெகஜித் காப்பாற்றினாரா? சரத்குமாரின் கொலை வெறியில் இருந்து இந்திரஜித் ஜெகஜித் தப்பித்தாரா ?சரத்குமார் தன் மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே ’ஆழி’ படத்தின் மீதிக்கதை.
தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் தன் மகள் மீது பாசம் கொண்ட தந்தையாகவும் , கோபமானவுடன் கொடூர குணம் கொண்ட வில்லனாகவும் என இரண்டு கதாபாத்திரத்திலும் தனது அனுபவ நடிப்பில் அந்த கதாபாத்திரத்திரமாக வாழ்கிறார் .
அறிமுக நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித் தேர்ந்த நடிகராக இயல்பான நடிப்பில் காதலி அப்பாவால் தான் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் உயிருக்கு ஒரு ஆபத்து என்றதும் அவரை காப்பாற்ற போராடும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், அழகாக இருப்பதோடு அளவான நடிப்பின் முலம் கவனம் பெறுகிறார் .
பத்திரிக்கையாளராக நடித்திருக்கும் நிகில் முருகன், நாயகன் அப்பாவாக வரும் வையாபுரி, போலீசாக வரும் பிர்லா போஸ், நாயகன் அம்மாவாக வரும் தாமரை செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை . வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.
ஆனந்த் என்.நாயர் ஒளிப்பதிவில் ஆழ்கடலின் அழகையும் அதில் இருக்கும் ஆபத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
இயல்பான காதல் கதையில், தன் மகளின் காதலனை கொலை செய்ய நினைக்கும் அப்பா , ஆபத்தில் சிக்கி கொள்ளும் காதலியின் அப்பாவை காப்பாற்ற நினைக்கும் காதலன் என ஆரம்பம் முதல் இறுதிவரை படகில் நடுக்கடலில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் போராட்டத்தை நேர்த்தியான கதையுடன் பார்வையாளர்கள் ரசிக்கும்படி விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் திரைபடத்தை இயக்கியுள்ளார் மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன்
ரேட்டிங் : 3 / 5





Comments