’வா வாத்தியார்’ - விமர்சனம்
- mediatalks001
- Jan 17
- 1 min read

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண்
எம்ஜிஆர் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
எம்.ஜி.ஆர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அதே நேரம் அவருக்கு பேரன் கார்த்தி பிறக்கிறார்.
எம் ஜி ஆர் இறந்த அதே நேரத்தில் பேரன் கார்த்தி பிறந்ததால் எம் ஜி ஆரை போல கொள்கைகளுடன் நேர்மையாக ராஜ்கிரண் அவரை வளர்க்கிறார்.
ராஜ்கிரணின் விருப்பப்படி புலியூர் கோட்டம் போலீஸ் ஸ்டேஷனில்
இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கும் கார்த்தி எம்.ஜி.ஆராக வளர்ந்தாலும் நம்பியாராக எதிர்மறை சிந்தனைகளோடு அனைவரையும் ஏமாற்றுகின்ற
ஊழல் இன்ஸ்பெக்டராக மாறுகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் மஞ்சள் முகம் என்ற பெயரில் அரசின் சதித்திட்டம் பற்றிய தகவலை வெளியிட்டு மக்களுக்காக போராடும் சில இளைஞர்களை ‘என்கவுன்ட்டர்’ செய்ய கார்ப்பரேட் மற்றும் அரசியல் இடைத்தரகரான சத்யராஜுடன் இணைந்து அழிக்கும் பணியில் கார்த்தி ஈடுபடுகிறார்.
எம் ஜி ஆரை போல நேர்மையாக வளர்ந்த கார்த்தியின் உண்மையான முகம் தெரியவர ராஜ்கிரண் கவலையில் இறந்துபோகிறார்.
தாத்தா ராஜ்கிரணின் இறப்பினால் மனமுடையும் கார்த்தியின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த மாற்றத்தினால் நடந்தது என்ன ? கார்த்தி மஞ்சள் முகம் குழுவை ‘என்கவுன்ட்டரிலிருந்து காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதே ’வா வாத்தியார்’ படத்தின் மீதிக்கதை.
காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் கார்த்தி ரசிக்க வைக்கும் நடிப்பில் ராமேஸ்வரன்,ராமச்சந்திரன் என நல்லவராகவும் , கெட்டவராகவும் நடித்திருக்கிறார். உடல் மொழியில் எம்,ஜி.ஆர் போல நடை, உடை, நடனம், பேச்சு , என அனைத்திலும் மிக சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கிருத்தி ஷெட்டி இயல்பான நடிப்புடன் அழகு மற்றும் நடனத்தில் ரசிகர்களை கவர்கிறார்.
எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்திருக்கும் ராஜ்கிரண் அழுத்தமான கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பில் கவர்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சத்யராஜ்,மீண்டும் தனது தோற்றத்தில்
வித்தியாசத்தை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.
ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ் ,நிழல்கள் ரவி, ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பி.எல்.தேனப்பன், யார் கண்ணன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாபி சிம்ஹா என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையும், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.
அரசியல் பின்னணி கொண்ட கதைக்களத்தில் புதிய சிந்தனையில் எம்.ஜி.ஆர் என்கிற மாபெரும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் ரசிக்கும்படி சூப்பர் ஹீரோ பேண்டஸி படமாக எழுதி இயக்கியுள்ளார் நலன் குமாரசாமி.
ரேட்டிங் - 3.5 / 5








Comments