top of page

"தலைவர் தம்பி தலைமையில்"- விமர்சனம்

  • mediatalks001
  • Jan 17
  • 1 min read

பஞ்சாயத்து தலைவராக இருக்கும் நாயகன் ஜீவா. கிராம மக்களின் வாக்குகளுக்காக அவர்களின் வீட்டு நல்ல நிகழ்ச்சிகள் முதல் துக்கம் வரை அனைத்தையும் முன்னின்று நடத்துகிறார்.


இந்த சூழலில் இதே கிராமத்தில் வசிக்கும் இளவரசுவின் மகள் பிரார்த்தனாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் ஜீவா.


அப்போது இளவரசுவின் பக்கத்து வீட்டுக்காரராக இருக்கும் தம்பி ராமையாவின் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் அப்பா இறந்து விடுகிறார். தம்பி ராமையாவுக்கும் இளவரசுக்கும் ஏற்கனவே முன் பகை இருந்து வருகிறது.


இளவரசுவின் மகள் திருமணம் நடைபெறும் அதே நேரத்தில் தான் தன்னுடைய அப்பாவின் இறுதி ஊர்வலமும் நடக்க வேண்டும் என தம்பி ராமையா பிடிவாதமாக சொல்லி விடுகிறார் தன் மகள் திருமணம் தனது வீட்டில் தான் நடக்க வேண்டும் என்பதில் இளவரசுவும் உறுதியாக இருக்கிறார்.


இரண்டு நிகழ்வுகளுக்கும் பொறுப்பேற்கும் ஜீவா பிரச்சினைகளை சமாளித்து திருமணத்தையும், இறுதி ஊர்வலத்தையும் எப்படி நடத்தி முடித்தார் .என்பதுதான் "தலைவர் தம்பி தலைமையில்"படத்தின் மீதிக் கதை.


பஞ்சாயத்து தலைவராக நடித்திருக்கும் ஜீவா இயல்பான நடிப்பில் கதைதான் முக்கியம் என்பதை உணர்ந்து முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். நகைச்சுவை, அதிகாரம் ஆகியவற்றின் சரியான சமநிலையுடன் சிரித்துக் கொண்டே காரியத்தை சாதிக்கும் ஜீவாவின் நடிப்பு அபாரம். அனைவரிடத்திலும் அன்பாகவும், அக்கறையாகவும், நட்பாகவும் பழகும் ஒரு கலகலப்பான கதாபாத்திரத்தில் களமிறங்கி ஜீவா நடித்திருப்பது பாராட்டத்தக்கது.


மணமகளாக நடித்திருக்கும்பிரார்த்தனா நாதன் எளிமையான அழகில் எதார்த்தமான நடிப்பு மூலம் அனைவரையும் கவர்கிறார்.

இளவரசு மற்றும் தம்பி ராமையா இருவருமே கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார்கள்.


ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி என அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. பப்ளு அஜு ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.


எதார்த்தமான வாழ்வியல் சம்பவங்களை மிக நேர்த்தியான காட்சிகளில் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் யாரும் யூகிக்க முடியாத விதத்தில் சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி ஒரு முழுநீள காமெடி திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நித்திஷ் சகாதேவ்.


ரேட்டிங் - 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page