top of page

'மாயபிம்பம்' - விமர்சனம்

  • mediatalks001
  • 3 days ago
  • 1 min read


செல்ஃப்  ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே ஜே சுரேந்தர் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ஆகாஷ்,   ஜானகி, ஹரி ருத்ரன்,  ராஜேஷ், அருண் குமார்,  மணிமேகலை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மாயபிம்பம்’.


2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக ஆரம்பிக்கிறது .


நெருங்கிய நண்பர்களாக  மருத்துவக் கல்லூரி மாணவரான நாயகன் ஆகாஷுக்கு  ஹரி ருத்ரன்,  ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் இருக்கிறார்கள்.


கேபிள் டிவி நடத்தி வரும் ஹரி  ருத்ரன் மட்டும் எத்தகைய பெண்களையும் எளிதில் கவரும் குணம் கொண்டவராக   திறமைசாலியாக  இருக்கிறார்.


ஆகாஷ் மருத்துவ கல்லூரிக்கு செல்லும் போது  பேருந்து பயணத்தில் தற்செயலாக நாயகி ஜானகியை பார்க்கிறார். ஜானகி மேல் அவருக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது.


ஜானகியை பார்க்க மீண்டும் செல்லும் ஆகாஷ் ஒரு விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்பொழுது அவரை கவனித்துக் கொள்ளும் நர்ஸாக அங்கு வருகிறார் ஜானகி.


ஒரு கட்டத்தில்  ஜானகியை காதலிக்கும்  நாயகன் ஆகாஷ்  தவறான புரிதலால் நாயகி ஜானகியை விட்டு பிரிக்கிறார்.


இறுதியில் நாயகன் ஆகாஷ்  நாயகி ஜானகியை மீண்டும் சந்தித்தாரா ? அதன் பிறகு நடந்தது என்ன ? என்பதுதான் 'மாயபிம்பம்' படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ் காதல், குடும்ப பாசம் , நட்பு, செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் ஜானகி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் .மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.


நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார்  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள் .


இசையமைப்பாளர் நந்தாவின் இசையும், எட்வின் சகாயின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.


காதலை மையப்படுத்திய கதையுடன்  தவறான புரிதலால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் அழுத்தமான திரைக்கதை  அமைப்பில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர்.


ரேட்டிங் - 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page