top of page

’ திரெளபதி 2 ’ - விமர்சனம்

  • mediatalks001
  • 4 days ago
  • 2 min read

நேதாஜி புரொடக்க்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில்  ரிச்சர்ட் ரிஷி,  ரக்ஷனா இந்துசூடன் , தேவயானி ஷர்மா ,நட்டி நட்ராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’ திரெளபதி 2’.


மகளுடன் வாழ்ந்து வரும் ரிச்சர்ட் ரிஷியின் உறவினர் ஒருவரது நிலம்  வக்பு வாரியத்தால்  விற்க முடியாமல் போகிறது. 


அவரது நிலத்தை மீட்டு தர ஊர் மக்களை ரிச்சர்ட் ரிஷி ஒன்று திரட்டுகிறார்.. 


அப்போது ஊரில் உள்ள பல வருடங்களாக  பராமரிக்கப்படாத கோயிலை புதுப்பிக்க வெளிநாட்டில் இருந்து அந்த ஊருக்கு வருகிறார் நாயகி ரக்ஷனா இந்துசூடன்.


 அந்த கோயிலை  பார்க்க வரும் ரக்ஷனா இந்துசூடன் திரௌபதியாக மாறி ரிச்சர்ட்  ரிஷியிடம் மன்னிப்பு கேட்பதுடன் 14ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை கதையாக சொல்ல  தொடங்குகிறார்.


 திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த வீர வல்லாள மகாராஜாவின்  (நட்டி)  ஆட்சியில்   அவரது கருட படையின் தளபதியாக வீரசிம்ம காடவராயர் (ரிச்சர்ட்  ரிஷி) இருக்கிறார்.


 இந்த சுழலில் மதுரையை ஆண்டு வரும் சுல்தானின்படைகள் மக்கள் அனைவரையும்  மதம் மாற்ற கட்டாயப்படுத்தி, பல கொடுமைகளை செய்து வருகின்றனர். 


டெல்லியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்யும் துக்ளக் என்ற ஆட்சியாளர்  தென் தமிழகத்தை கைப்பற்ற இங்கு வருகிறார்.அவரை எதிர்த்து போரிடும் வீர வல்லாள மகாராஜா கொடூரமாக கொல்லப்படுகிறார். மகாராஜாவையும் , கருட படை வீரர்களையும் காப்பாற்ற  முடியாமல் போனதை நினைத்து  தனது உயிரை மாய்த்துக்கொள்ள முற்படும் வீரசிம்ம காடவராயர் முன் மகாராஜா  தோன்றி சில பொறுப்புகளை அளிக்கிறார். 


மகாராஜா உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பில்  வீரசிம்ம காடவராயர் தன் மனைவி திரெளபதியை சந்திக்க,, மகாராஜா உயிரை காப்பாற்ற தவறியதாக அவரை விட்டு பிரிகிறார் திரெளபதி 


 வீர வல்லாளமகாராஜா நட்ராஜ் பிறப்பித்த  உத்தரவு என்ன ? அந்த  

உத்தரவை நிறைவேற்றும்  முயற்சியில்  ஈடுபடும்  வீரசிம்ம காடவராயரான ரிச்சர்ட்  ரிஷி வெற்றி பெற்றாரா ?  திரெளபதியான  நாயகி ரக்ஷனா இந்துசூடனிடம்  மீண்டும் இணைந்தாரா ? என்பதுதான் ‘திரெளபதி 2’ படத்தின் மீதி கதை .


நாயகனாக வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்

ரிச்சர்ட் ரிஷி கதாபாத்திரத்தின் உடல் மொழியில் சண்டை , காதல், வசன உச்சரிப்பு என அனைத்திலும் திறமையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


நாயகியாக திரெளபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடன் வீர மிக்க பெண்மணியாக படம் முழுவதும் தன் நேர்த்தியான நடிப்பில்  திரெளபதி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.


 வல்லாள மகாராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி  நடராஜ், முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிராக் ஜானி,  ஜியாசுதீன் தம்கானியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பாவும்,முகமது பின் துக்ளக்கின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி சர்மா, சம்புவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமூர்த்தி, பரணி, திவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருனோதயன் ,லக்‌ஷ்மணன் என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.


இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையும், ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தர் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.


 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவின் வாழ்க்கை  வரலாற்றை மையக்கருவாக வைத்து முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்துக்களுக்கு நடந்த வரலாற்று கொடுமையான சம்பவங்களுடன்  திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி.


 ரேட்டிங் - 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page