MediaTalks Logo
Header Advertisement
reviews
31 January 2026 at 00:12•1 Views

‘க்ராணி’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘க்ராணி’  -  விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு அந்த சிறுமியின் இதயம் மட்டும் காணாமல் போகிறது. அந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி தீலீபன் விசாரிக்கிறார். அவருக்கு உதவியாக போலீஸ் ஏட்டு சிங்கம் புலி இருக்கிறார்.

இதற்கிடையே, தனது மனைவி அபர்ணா, மகன் கன்ஷியாம் ,மகள் சாண்ட்ராஆகியோருடன் லண்டனில் இருந்து வரும் ஆனந்த் நாக் அரண்மனை போல இருக்கும் தன் பூர்வீக வீட்டிற்கு குடும்பத்துடன் வசிக்க வருகிறார்.

அப்போது வயதான பாட்டியான வடிவுக்கரசி வீட்டு வாசலில் மயக்கம் அடைந்து விழுகிறார். அவரை உள்ளே அழைத்து வந்து விட்டில் படுக்க வைக்கிறார்ஆனந்த் நாக் . பாட்டியான வடிவுக்கரசியை பார்க்கும் ஊர் தலைவரான கஜ ராஜ் ஆனந்த் நாக்கை எச்சரித்தும் அவரது பேச்சை கேட்காமல் வீட்டில் தங்க வைக்கிறார்

வடிவுக்கரசி பற்றிய தகவலறிந்த ஆனந்த் நாக் அதிர்ச்சியடையும் நேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் வடிவுக்கரசி ஆனந்த் நாக் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து விடுகிறார். இதை நேரில் பார்க்கும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே போக பார்க்கிறார்கள். ஆனால் அவர்களால் வெளியே போக முடியாத அளவிற்கு வடிவுக்கரசி அந்த வீட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்கிறார்.

இந்நிலையில் வடிவுக்கரசி பற்றிய ரகசிய தகவல் காவல்துறை அதிகாரி தீலீபனுக்கு தெரிந்ததும் மேலும் விசாரணையை தீவிரப்படுத்துகிறார்.

வடிவுக்கரசியின் திட்டத்தை விசாரணை மூலம் தெரிந்து கொண்ட திலிபன் அந்த குழந்தைகளை அவரிடம் இருந்து காப்பாற்றினாரா? வயதான பாட்டியான வடிவுக்கரசி யார்? அவர் என்ன காரணத்திற்காக குழந்தைகளை கொலை செய்கிறார்? எனபதுதான் ‘க்ராணி’ படத்தின் மீதிக்கதை.

ஒச்சாயி பாட்டியாக நடித்திருக்கும் வடிவுக்கரசிஅடையாளம் தெரியாத அளவில் ஒப்பனையோடு வெறித்தனமான பார்வையில் சிறப்பான நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன், போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் சிங்கம்புலி, ஊர் தலைவராக நடித்திருக்கும் கஜராஜ், வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் செல்லையா பாண்டியன் இசையும், மணிகண்டன் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மையமாக வைத்து பரபரப்பான திரைக்கதை அமைப்பில் யாரும் யூகிக்க முடியாத வகையில் இறுதிவரை அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் ரசிக்கும் திகில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் விஜய குமாரன்.

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: