MediaTalks Logo
Header Advertisement
reviews
8 March 2026 at 22:28•1 Views

‘வடம் ‘ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘வடம் ‘ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

மாசாணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜசேகர் தயாரிப்பில்  இயக்குநர் கேந்திரன் வி இயக்கத்தில்  ’வடம்’

விமல், நட்டி நடராஜ்,சனஷ்காஸ்ரீ, முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், இந்துமதி, பால சரவணன், மதுசூதனன் ராவ் , தீபா சங்கர்  ஆகியோர் நடித்துள்ளனர்

கிராமத்தில் மரியாதைமிக்க மனிதராக வாழ்ந்து வருபவர் ஆடுகளம் நரேன் லாரிகளில் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளை போலீஸ் உதவியுடன் காப்பாற்றி தனது கோசாலையில் வைத்துப் பராமரித்து வருகிறார்.

நட்டி நட்ராஜால் அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல் குறைபாடுள்ள கன்று குட்டியை ஆடுகளம் நரேனின் மகனான விமல் கோசாலையில் விடாமல் தனது வீட்டில் வைத்து பராமரித்து பாசத்துடன் அந்த காளைக்கு பாண்டி முனி பெயர் வைத்து அதற்கு பயிற்சியளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக மாற்றுகிறார்.

இவர் வளர்க்கும் காளை கிராமத்தில் நடக்கும் அனைத்து மஞ்சுவிரட்டு போட்டியிலும் வெற்றி பெறுகிறது.

இந்நிலையில் ஒரு விபத்தில் விமலின் பாண்டி முனி காளை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வர, ஜெயிலில் செய்யாத கொலை குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் விமல் ஜாமினில் வெளியே வருகிறார்.

இச் சுழலில் விமலின் வீட்டில் வேலை செய்யும் முர்த்தி ஆடுகளம் நரேனை பழி வாங்க ஏரியா தாதா மதுசூதனன் ராவ் மூலமாக் விமலை கொலை செய்ய திட்டம் போடுகிறார்.

இச் சமயத்தில் விமலுக்கு நாயகி சனஷ்கா ஸ்ரீயும் விமலும் காதலிக்கிறார்கள்.

இந்த நிலையில் நாயகி சனஷ்கா ஸ்ரீ இரவு விமலிடம் தனிமையாக பேச வேண்டும் என அழைக்கும்போது மதுசூதனன் ராவின் தம்பி அங்கு அடியாட்களுடன் விமலை கொலை செய்ய முயற்சிக்கிறார் .

அதே நேரம் காதலியான சனஷ்கா ஸ்ரீ தன் காளை மாட்டின் மூலம் விமலை கொலை செய்ய முயற்சிக்க உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் .நாயகன் விமல் .

இறுதியில் சனஷ்கா ஸ்ரீ என்ன காரணத்திற்காக விமலை கொலை செய்ய நினைக்கிறார் ? நிரபராதியான விமல் யாரை கொன்ற குற்றத்திற்காக ஜாமினிலிருந்து வெளியே வந்தார் ? காதலியான சனஷ்கா ஸ்ரீயை விமல் திருமணம் செய்து கொண்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘வடம் ‘

நாயகனாக நடித்திருக்கும் விமல் காளை மாடுகளிடம் பாசமாக பழகுவது , அவைகளுக்கு திறமையாக பயிற்சி கொடுப்பது , காதல்,நடனம் , ஆக்ஷன் என அனைத்திலும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

கிராமத்து அழகுடன் அறிமுக நாயகியாக நடித்திருக்கும் அழகான சனஷ்கா ஸ்ரீ இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

]

விமலின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், நட்டி நட்ராஜ் , முனீஷ்காந்த், இந்துமதி, தீபா சங்கர், பால சரவணன்,மதுசூதனன் ராவ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் டி.இமான் பாடல்கள் கேட்பதற்கு இனிமை ,, பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உளள்து.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், ஒளிப்பதிவு அழகாகவும் பிரமாண்டமாகவும் உளள்து.

மஞ்சு விரட்டை மையமாக கொண்ட கதையுடன் காளையை பாசமாக வளர்க்கும் குடும்பம், மஞ்சு விரட்டு போட்டியினால் உருவாகும் பகை , எதிரிகளின் சூழ்ச்சி என விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் எதிர்பாராத திருப்பங்களுடன் அனைவரும் ரசிக்கும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கேந்திரன் வி

ரேட்டிங் : 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: