top of page

பூஜையுடன் டப்பிங் தொடங்கியகெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’



பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது!




கௌதம் கார்த்திக்-சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலம் வர்த்தக வட்டாரங்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளனர். சமீபத்தில், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இதனை அடுத்து, நேற்று பூஜையுடன் டப்பிங் பணிகள் துவங்கியது.


'கிரிமினல்’ படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.


சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.


இப்படத்தின் டீசர், டிரைலர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

bottom of page